தனக்கு பிடித்த உணவை சாப்பிட்ட பின் மரணமடைந்த 116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண்..!

ஜப்பான் உலகின் மனிதர்கள் மிக அதிக ஆயுட்காலம் வாழும்  நாடுகளில் ஒன்றாகும். அதிக ஆயுட்காலம் வாழ்ந்த மிக வயதான மனிதர்களில் பல நபர்களின் தாயகமாக ஜப்பான் உள்ளது என்றே சொல்லலாம். உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் காஷிவாராவில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார். ஃபுசா டாட்சுமி என்ற அந்த மூதாட்டி, நேற்று செவ்வாய்கிழமை, அவருக்குப் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு, பராமரிப்பு நிலையத்திலேயே மரணமடைந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், டாட்சுமி தனது 116வது வயதில் டிசம்பர் 12 ஆம் தேதி இறந்தார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் பல தொற்றுநோய்களின் இடையே வாழ்ந்த தட்சுமி, கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக அங்கீகரிக்கப்பட்டார். கின்னஸ் உலக சாதனைகள் ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அவர் 116 வயதை எட்டிய வரலாற்றில் 27வது நபர் ஆனார். மேலும்,  அவ்வாறு செய்த ஏழாவது ஜப்பானியர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times