15.9 C
Munich
Sunday, September 8, 2024

சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா

Must read

Last Updated on: 24th January 2024, 09:11 pm

கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது.வீட்டு நெருக்கடி தொடர்பான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் சேர்க்கையில் 35% குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.கனடாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், வீடுகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.வீடுகளின் பற்றாக்குறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கனடா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.”செப்டம்பர்-2024 செமஸ்டருக்கு முன்னதாக, கல்வி நிறுவனங்கள் போதுமான தரத்துடன் இயங்குவதை உறுதிசெய்ய, விசாவைக் கட்டுப்படுத்துவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று முன்பு கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறி இருந்தார்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article