140 ஆண்டுகளில் இல்லாத மழை… 27 பேர் பலி.. கொட்டும் மழையால் உருக்குலைந்த சீனா!

உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு ஒவ்வொரு மாதிரியாக பிரதிபலித்து வருகிறது. சில நாடுகளில் கொளுத்தும் வெயில், உயரும் வெப்பநிலை, தண்ணீர் பஞ்சம் என மக்கள் வறட்சியை சந்தித்து வருகின்றனர். சில நாடுகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கன மழை கொட்டி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் கிழமை வரை கொட்டி தீர்த்த மழையால் பெய்ஜிங்கின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை 744.8 மில்லி மீட்டர் மழை அதாவது 74 சென்டி மீட்டர் மழை கொட்டியுள்ளதாக பெய்ஜிங் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டோச்சுரி புயலால் இப்படி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபெய் மாகாணம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வரலாறு காணாத மழைப்பொழி காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் அபாயக் கட்டத்தை தாண்டின. குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன. ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இடைவிடாத கொட்டிய மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் கூட துண்டிக்கப்பட்டன. ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளத்தால் பல பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன. சீனாவில் கொட்டிய மழையால் இதுவரை 21 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 27 பேர் மாயமாகியுள்ளனர்.


சீனாவில் பெய்து வரும் பேய் மழையால் Zhuozhou நகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சப்வேக்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. வட சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரத்திற்கு கடந்த இரண்டு நாட்களில் மீட்பு குழுவை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times