10 C
Munich
Friday, October 18, 2024

சிறுவன் விளையாட்டாக செய்த செயல்… ரூபாய் 40 கோடி இழப்பீடு கேட்ட உணவு நிறுவனம்

சிறுவன் விளையாட்டாக செய்த செயல்… ரூபாய் 40 கோடி இழப்பீடு கேட்ட உணவு நிறுவனம்

Last Updated on: 9th June 2023, 09:34 pm

ஜப்பானில் சுஷி உணவக நிறுவனம் ஒன்று சிறுவன் ஒருவர் சோயா சாஸ் போத்தலை எச்சில் வைத்ததாக கூறி 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு

ஜப்பானில் Sushiro என்ற சுஷி உணவக நிறுவனம், நாட்டின் பல்வேறு நகரங்களில் உணவகங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதன் உரிமையாளர் Akindo Sushiro ஒசாகா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார்.

அதில் தொடர்புடைய சம்பவம் கடந்த ஜனவரியில் கிஃபு மாகாணத்தில் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். சிறுவன் ஒருவன் தமது நண்பருடன் தொடர்புடைய உணவகத்திற்கு சென்றதாகவும், ஒரு சோயா சாஸ் போத்தலை திறந்து நக்கினான் எனவும், அதை அவர்கள் காணொளியாக பதிவு செய்ததாகவும் தமது புகார் மனுவில் Akindo Sushiro குறிப்பிட்டுள்ளார்.மட்டுமின்றி, பயன்படுத்தாத தேநீர் கிண்ணம் ஒன்றையும் எச்சில் வைத்துள்ளார். அத்துடன், எச்சில் விரலை பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஒருவருக்காக கொண்டுசெல்லும் சுஷி உணவைத் தொட்டதாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 கோடி ரூபாய் கேட்டு வழக்கு:

மேலும், தொடர்புடைய காணொளி இணையத்தில் வெளியாக, வாடிக்கையாளர்கள் வருகை பெருமளவு சரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, குறித்த காணொளியால் தங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16 பில்லியன் யென் அளவுக்கு சரிவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே, தொடர்புடைய சிறுவனிடம் இருந்து இழப்பீடாக 40 கோடி ரூபாய் கேட்டு வழக்கு பதிந்துள்ளார். ஆனால் சோயா சாஸ் போத்தலை எச்சில் வைத்தது உண்மை தான் என்றாலும், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், வழக்கை தள்ளுபடி செய்யவும் கோரியுள்ளார்.

மட்டுமின்றி, தாமும் நண்பரும் விளையாட்டாக செய்த செயல் இதுவெனவும், அந்த காணொளி சமூக ஊடகத்தில் மூன்றாவது நபரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here