லண்டன்: பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.மொத்தமுள்ள 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டார்மர் முன்னிலை வகித்து வருகிறார். காலை நிலவரப்படி, 350 க்கும் மேற்பட்ட இடங்களில், லேபர் கட்சி முன்னிலை வகித்துள்ளது.
ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும் பழமைவாத கட்சி 82 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், ரிஷி சுனக், ஆட்சியை இழப்பார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.