ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால், அவர்கள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஐசிசி அறிவிப்பு!இந்த விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளூர் போட்டிகளுக்கு அந்நாடுகளின் பாலின வரையறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு என ஐசிசி விளக்கம் ஐசிசியின் இந்த விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே, இனி பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.