கிரிக்கெட் அதிசயம்!“நம்ப முடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலககோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்”-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
“டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள்.
அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட, நான் மகிழ்ச்சியடைய வேறேதும் இல்லை. அதுவும், உலககோப்பை அரையிறுதிப் போட்டி என்ற மிகப் பெரிய அரங்கிலும், எனது சொந்த மைதானத்திலும் இதனை செய்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.”15 நவம்பர் 2023சச்சின் டெண்டுல்கர்இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்