15.9 C
Munich
Sunday, September 8, 2024

டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்’

Must read

Last Updated on: 30th June 2024, 04:54 pm

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது . 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பவுண்டரிகள் அடித்து அசத்தினர். கேஷவ் மஹாராஜ் பந்துவீச்சில் 9 ரன்னில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.

அடுத்து வந்த ரிசப்பந்த்(0) டக் அவுட் ஆனார்.அடுத்து வந்த சூர்யகுமார் 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அக்ஷர் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராத் கோஹ்லி(76) நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. இந்நிலையில் தென்னாப்ரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.177 ரன்கள் இலக்காகக்கொண்டு பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் க்ளாசன் (52)அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். குயின்டன் டிகாக் 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இறுதியில் தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்னில் தோல்வியடைந்தது. பும்ரா, அர்ஷ்தீப் சிங், மற்றும் பாண்ட்யா அசத்தல் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது.ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக ‛சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article