அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் கவனத்துக்கு…’ – இந்திரா நூயி ‘வார்னிங்’ உடன் அறிவுரை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக வன்முறைத் தாக்குதல்களில் உயிரிழப்பது அதிகரித்துள்ள நிலையில், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி இந்திய மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். “கவனமாக இருங்கள். உள்ளூர் சட்டங்களை மதித்து நடங்கள். போதை வஸ்துக்கள் பயன்படுத்தாதீர்கள். அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். இவற்றைச் செய்தால் இந்த நாட்டில் நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக அமைத்துக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இரவில் ஆள் அரவமற்றப் பகுதிகளுக்கு தனியாக செல்லாதீர்கள். போதை வேண்டாம். அதிக மதுவும் வேண்டாம். இவைதான் பேரழிவுக்கான சூத்திரம். அதேபோல் அமெரிக்கா வர விரும்பும் மாணவர்கள் நீங்கள் படிக்க வேண்டிய பல்கலைக்கழகத்தைக் கவனமாக தேர்ந்தெடுங்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலில் கலாச்சார ரீதியாக பெரிய மாற்றத்தை எதிகொள்ள வேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் நடப்பாண்டில் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில்ம் இந்திய மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times