காசா பகுதியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 8.22 கோடி நன்கொடை- இலங்கை அரசு

தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசுபாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times