112 ஆண்டுகள் பழமையான டைட்டானிக் மெனு கார்டு..!

உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணம் செய்த 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தற்போதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாசினேட்டிங் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட 112 ஆண்டுகள் பழமையான அந்த மெனு கார்டில் கப்பலின் முதல் மற்றும் 3-ம் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல் வகுப்பிற்கான மெனுவில், பில்லட்ஸ் ஆப் பிரில், கார்ண்ட் பீப், காய்கறி வகைகள் மற்றும் பாலாடைகள், வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், பிசைந்த, வறுத்த மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்டர்டு புட்டிங், ஆப்பிள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

பபே வகையில் பானை இரால், நார்வேஜியன் நெத்திலிகள், ஜூஸ்ட், மத்தி, வறுத்த மாட்டிறைச்சி, பல்வேறு கோழி உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 3-ம் வகுப்பிற்கான மெனுவில் ஓட்ஸ் கஞ்சி மற்றும் பால், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, ரொட்டி மற்றும் வெண்ணெய், தேநீர், காலை உணவாக காபி ஆகியவை அடங்கும்.

இரவு உணவில், அரிசி சூப், ரொட்டி, பழுப்பு குழம்பு, இனிப்பு சோளம், பிளம்ப் புட்டிங், இனிப்பு சாஸ், குளிர் இறைச்சி, பாலாடை கட்டி, சுண்ட வைத்த அத்தி பழங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times