கனடாவின் சர்ரேயில் 28 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்,இது திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.ஜூன் 7 ஆம் தேதி காலை பாதிக்கப்பட்ட யுவராஜ் கோயலின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் யுவராஜ் கோயலின் உடலை மீட்டனர்.இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுவராஜ் கோயல் 2019 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் பஞ்சாபின் லூதியானாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின், அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் இருக்கும் கார் டீலர்ஷிப்பில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
கனடா நான்கு சந்தேக நபர்கள் கைது அவருக்கு சமீபத்தில் கனடா வாழ நிரந்தர குடியுரிமை கிடைத்தது.கோயல் தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு அவர் தனது தாயுடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.அவர் வழக்கம் போல் ஜிம்மில் இருந்து வந்து காரில் இருந்து வெளியேறிய போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.அவர் தனது காரில் இருந்து இறங்கிய பின்னர், இந்தியா திரும்பிய தனது தாய்க்கு குட்நைட் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.இந்நிலையில், சம்பவ நடந்த சிறிது நேரத்தில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக சர்ரே ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ்(RCMP) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது
Very interesting information!Perfect just what I was searching for!Blog monetyze