அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 26 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சாய் சூர்யா அவினாஸ். (26).
அமெரிக்காவில் டிரின் பல்கலையில் படித்து வந்தார். நேற்று முன்தினம்( ஜூலை 07) நியூயார்க்கின் அல்பானி என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதனை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்தது.