உலகிலேயே மிகவும் பரபரப்பான நிலையங்கள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஷின்ஜுகு என்று அழைக்கப்படுகிறது. இது ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையமாகும்.
ஒவ்வொரு நாளும் 3.6 மில்லியன் மக்கள் இந்த பரபரப்பான ரயில் நிலையத்தை கடந்து செல்கிறார்கள். இந்த ரயில் நிலையம் மிகப் பெரியதாக இருப்பதால், 200க்கும் மேற்பட்ட வெளியேறும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பயணிகள் ரயில் மற்றும் மெட்ரோ பாதைகளை இணைக்கும் மையமாக இந்த நிலையம் செயல்படுகிறது. இதனால் இங்கு ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டில் சராசரியாக தினசரி 3.59 மில்லியன் பேர் பயணித்துள்ள இந்த ரயில் நிலையம் இதுவரை உலகின் பரபரப்பான ரயில் நிலையமாக உள்ளது. இது கின்னஸ் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷின்ஜுகு ரயில் நிலையம் 1885 இல் திறக்கப்பட்டது. முதலில், ஷின்ஜுகு நிலையத்தில் அதிக போக்குவரத்து இல்லை. ஒடாக்கியோ லைன் (1923), கீயோ லைன் (1915) மற்றும் சாகோ லைன் (1889) திறக்கப்பட்டதற்கு பின் ஸ்டேஷன் வழியாக போக்குவரத்து அதிகரித்துள்ளது.