சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்.. கற்பனை காதலியுடன் வாழ தற்கொலை செய்த விபரீதம்..!

ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் [Daenero] கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.

சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளான்.

நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன, தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து சைன்ஸ் பிக்க்ஷன் சினிமக்களில் கதையாக கூறப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலேயே நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times