- All
அணு ஆயுத ஷெல்டர்களை ரெடி பண்ணுங்க.. படைக்கு உத்தரவிட்ட புடின்? அணு ஆயுத போருக்கு தயாராகும் ரஷ்யா?!
While Loop in Java
கயானாவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு; உறவை வலுப்படுத்தும் என இணையத்தில் பதிவு!
ஜி20 மாநாடு: குழு புகைப்படத்தை தவற விட்ட ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ!
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!
நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறை! ஆராய்ச்சியில் அசத்தும் சீனா!
அணு ஆயுத ஷெல்டர்களை ரெடி பண்ணுங்க.. படைக்கு உத்தரவிட்ட புடின்? அணு ஆயுத போருக்கு தயாராகும் ரஷ்யா?!
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும். முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கூடாது என்ற விதியை வைத்து உள்ளது ரஷ்யா. ஆனால் இந்த விதியை ரஷ்யா தற்போது அதிபர் புடின் உத்தரவின் பெயரின் மாற்றி உள்ளது. அதன்படி அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் என்று பார்த்தால் ஒரு வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்தான். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்த தவறு காரணமாக.. உலக அளவில் அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினின் விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு உடனடியாக பதிலடி தரப்படும். அமெரிக்காவின் இந்த முடிவு நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது, என்று கூறி உள்ளார். அமெரிக்காவின் நீண்ட
While Loop in Java
A while loop in Java is a control flow statement that repeatedly executes a block of code as long as a specified condition is true. It is commonly used when the number of iterations is not known beforehand and depends on some runtime condition. Syntax of a while loop: Key Points: Flow of a while Loop: Example: Printing Numbers from 1 to 5 Output: Explanation: Infinite Loop Example If the condition is always true (e.g., while (true)), the loop will run forever unless you explicitly break out of it: Common Use Cases: If you have more questions or need further examples, feel free to ask! Stopping an infinite loop in Java Stopping an infinite loop in Java depends on how it is written. Here are some common methods to terminate an infinite loop: 1. Using break Statement The break statement can be used to exit a loop at any point. Here’s an example: Output: 2. Using a Condition You can prevent an infinite loop by ensuring the condition in the while loop eventually becomes false: 3. Manually Stopping Execution If the program is stuck in an infinite loop, you can manually stop it: 4. Using return Statement If the infinite
கயானாவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு; உறவை வலுப்படுத்தும் என இணையத்தில் பதிவு!
ஜார்ஜ்டவுன்: பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் பிரதமர் மோடி சென்றார். அவர், 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற,முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். ஜி – 20 அமைப்பின் உச்சி மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றது. மாநாட்டை முடித்த பின், கயானாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை கயானா அதிபர் முகமது இர்பான் அலி வரவேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, கயானா அதிபர் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் அன்பை பகிர்ந்து கொண்டனர். 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற, முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார். அவர், இந்தியா மற்றும் கயானா இடையேயான உறவுகளை வலுப்படுத்த இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கயானாவில் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர், இர்பான் அலி, பிரதமர் மார்க் அந்தோனி, மூத்த அமைச்சர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களுக்கு நன்றி. இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜி20 மாநாடு: குழு புகைப்படத்தை தவற விட்ட ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ!
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகத் தலைவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் குழு புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் தவற விட்டனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பங்கேற்பது இது கடைசி முறையாகும். டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், பருவநிலை மாநாடு மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஒரு மித்த கருத்தை எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஜி20 மாநாடு முடிந்த பிறகு உலக தலைவர்கள் அனைவரும் வழக்கமாக குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுக்காக ஒன்று சேர்ந்தனர். அங்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்துரையாடினர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் பிறகு தான், இந்த நிகழ்வை ஜோ பைடன் தவற விட்டது தெரியவந்தது. இவர், மட்டுமின்றி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இந்த நிகழ்வை தவற விட்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது : தலைவர்கள் வருவதற்கு முன்னரே முன்கூட்டியே புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதனால், சில தலைவர்கள் புகைப்படத்தில் இடம்பெறவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜோ பைடன் புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பல தலைவர்கள் புகைப்படம் எடுத்த பிறகு சென்றுவிட்டது தெரியவந்தது. இதற்கு அங்கிருந்த சில நடைமுறைச் சிக்கல்களே காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!
இஸ்ரோவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக் கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4,700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், அமெரிக்காவில் உள்ள கேப் கேனவர் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..
நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறை! ஆராய்ச்சியில் அசத்தும் சீனா!
Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 420 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் மூலம், அதன் தென் அரைக்கோளப்பகுதியில் எரிமலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து பல விண்கலன்களை அனுப்பி நிலவுடன் அண்மைக்காலமாகவே மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகிறது சீனா. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட Chang’e-4 விண்கலம், இதுவரை எந்த விண்கலமும் செல்லாத சந்திரனின் தொலைதூர பக்கத்துக்கு சென்று ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பியது. இதற்கு அடுத்தக்கட்டமாக, பூமிக்கு அருகே உள்ள நிலவின் பக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் Chang’e-5 திட்டத்தை செயல்படுத்தியது.