ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), புதன்கிழமையன்று, தஃப்தா பிரிட்ஜ் மற்றும் வாஷா ஸ்கொயர் பகுதிக்கு இடையே உள்ள கொர்ஃபக்கன் சாலையை மீண்டும் திறப்பதாகவும், சாலையில் இருந்து பாறைகள் அகற்றப்பட்ட பிறகு வாகனங்களுக்காக போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ததை அடுத்து கோர்பக்கான் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் அவற்றை அகற்றும் பணிக்காக சாலைகள் மூடப்படுவதாக ஆணையம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சாலையின் இருபுறமும் மூடப்பட்டிருந்த நிலையில், வாகனங்களின் பயன்பாட்டிற்காக சாலையை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பை ராஸ் அல் கைமா காவல்துறையும் அதன் சமூக ஊடக பக்கங்களில் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று, துபாய், அபுதாபி, ஃபுஜைரா மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.