வளைகுடா நாடுகளுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறை தேதிகள் குறித்த விபரங்கள்!

இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் புனித ரமலான் மாதம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், விரைவில் கொண்டாடப்படும் ஈத் அல் ஃபித்ரை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலானைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஈத் அல் ஃபித்ருக்கான விடுமுறையானது 2023 ஆம் ஆண்டின் முதல் நீண்ட வார இறுதியைக் குறிக்கும் என கூறப்படுகின்றது.

வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 29 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் மார்ச் 23, வியாழன் அன்று புனித மாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 23 வரை என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வளைகுடா நாடுகள் முழுவதும் ஈத் அல் ஃபித்ருக்கான விடுமுறை தேதிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம்

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 23 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஹ்ரைன்

பஹ்ரைனில் ஈத் அல் ஃபித்ர் ஏப்ரல் 21  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார விடுமுறையானது ஏப்ரல் 23  வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத்

குவைத்தில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்கள் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 21 தொடங்கி ஏப்ரல் 25 வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்றே விடுமுறை தனியார் முறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமான்

ஈத் அல் பித்ரின் முதல் நாள் ஏப்ரல் 22 அன்று வரக்கூடும், மேலும் குடியிருப்பாளர்கள் ஒன்பது நாள் விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரே எண்ணிக்கையிலான விடுமுறைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார்

கத்தாரில் ஈத் அல் ஃபித்ர் ஏப்ரல் 21 தொடங்கும், மேலும் விடுமுறையானது ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 25 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா

சவூதி அரேபியாவில் தனியார் துறை ஊழியர்களுக்கான, ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நான்கு நாட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுமுறை ஏப்ரல் 21 அன்று தொடங்கி, ஏப்ரல் 24  முடிவடையும் என்றும், ஏப்ரல் 25 அன்று வேலை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times