செவித்திறன் குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.
ஆப்பிளளின் புதிய அம்சம்:
ஆப்பிள் பல ஆண்டுகளாக அதன் அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் அணுகல் (accessibility) அம்சங்களுடன் நியாயமான கொள்கையை கடைபிடித்துவருகிறது. இன்னும் ஒரு படி மேலாக, இப்போது இந்த உத்தியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது ஆப்பிள்.
ஐபோன்கள் விரைவில் உங்கள் குரலில் பேசும், அதுவும் வெறும் 15 நிமிடப் பயிற்சியில் என்று சொன்னால் நம்பமுடிகிறதா..?
இந்தப் பயனுள்ள கருவியானது மாற்றுத் திறனாளிகள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவும். Apple அதை Personal Voice என்று அழைக்கிறது.பயனர் தங்கள் ஐபோனில் உரையைப் படித்து அவர்களின் குரலைப் பதிவு செய்யவேண்டும், பின்னர் அது சாதனத்தால் பயிற்சியளிக்க பயன்படுத்தப்படும்.
இதன்மூலம், அடுத்த முறை நபர் அழைப்பைப் பெறும்போது, லைவ் ஸ்பீச் எனப்படும் மற்றொரு அம்சம் பயிற்சி பெற்ற குரலைப் பயன்படுத்தும் மற்றும் எந்த ஃபேஸ்டைம் அழைப்பு உட்பட அழைப்பாளருக்கான உரைத் தூண்டலைப் படிக்கும். இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் வெளியிடப்படும் என்று ஆப்பிள் கூறுகிறது.
குரல் பற்றிய அனைத்து பயிற்சிகளும் சாதனத்தில் செய்யப்படுகின்றன என்று நிறுவனம் உறுதியளிக்கிறது, அதாவது அவர்களின் எல்லா தரவுகளும் தனிப்பட்டவை மற்றும் பாதுகாப்பானதாகவே இருக்கும்.