கரன்ட் பில் அதிகமா வருதா? குறைப்பதற்கு இந்த ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க!

மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது என்பவர்கள் பின்வரும் சில ஐடியாக்களை பின்பற்றினால் அதிகளவு பில்லை குறைக்க வாய்ப்புள்ளது. கோடை காலம் என்பதால் ஃபேன் இன்றி பெரும்பாலான வீடுகளில் மக்கள் இருக்க முடியாது.

இவை உள்ளிட்ட காரணங்களால் நம்மில் பலருக்கு கரன்ட் பில் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை குறைப்பதற்கு ஒரு சில நடவடிக்கைகளை மாற்றி அமைத்தாலே போதும். கரன்ட் பில்லை குறைத்து விடலாம்.

முதலில் நாம் பயன்படுத்தாத அல்லது தேவைப்படாத மின் சாதனங்கள் அனைத்தையும் ஆஃப் செய்து விட வேண்டும். இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதுதான் கரன்ட் பில் எகிறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கரன்ட்டை அதிகம் சாப்பிடுவதில் ஹீட்டர் முக்கிய இடம் வகிக்கிறது. இதன் பயன்பாட்டை குறைப்பதால் பில்லை குறைக்க முடியும். ஹீட்டர் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்து மாற்று வழியை கையாளலாம். அல்லது குறைந்த நேரம் பயன்படுத்தி ஆஃப் செய்து விடலாம்.

ஏசியை பயன்படுத்துவதாலும் மின்சார கட்டணம் அதிகமாக வரும். இதற்கு பெஸ்ட் வழி இன்வர்ட்டரில் ஏசியை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏசிக்கான கரன்ட் பில்லை 15 சதவீதம் வரை குறைக்கலாம்.

சமையல் அறையில் பயன்படுத்தும் சிம்னி அதிக அளவு கரன்டை இழுக்கும். மின்சார கட்டணம் குறைவாக வர வேண்டும் என நினைப்போர் சிம்னியை அளவுடன் பயன்படுத்தலாம்.

இதுபோன்ற சிறு சிறு மின் சாதனங்களை கவனத்துடன் தேவையான அளவு பயன்படுத்தும்போது மின் கட்டணத்தை குறைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times