கெட்ட கொழுப்பை வழித்து வெளியே தள்ளும் பூண்டு… காலைல எழுந்ததும் சாப்பிடுங்க… இந்த பலன்களும் கிடைக்கும்…

Garlic Eating Benefits In Tamil : பூண்டு இந்திய சமையலில் மட்டுமல்ல, சீனா மற்றும் தெற்காசிய நாடுகளின் சமையலில் மிக முக்கிய இடம்பெறும் ஒரு மசாலா பொருள். இதை பொதுவாக உணவுகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவோம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை எடுத்துக் கொள்ளும் உடலில் நிறைய அதிசயிக்கத்தக்க ஆரோக்கிய மாற்றங்கள் நிகழ்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வாங்க அது என்னனு தெரிஞ்சிகிட்டு நாமும் சாப்பிட ஆரம்பிப்போம்.

அல்லியம் சட்டைவம் என்பது பூண்டின் அறிவியல் பெயர். அளவில் தான் இது சிறியது. ஆனால் இதில் பயோ – ஆக்டிவ் மூலக்கூறுகள் மிக அதிகம். நிறைய ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்தது. அதனால் பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களைச் சாப்பிடலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

​நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் சல்ஃயூரிக் உள்ளிட்ட மூலக்கூறுகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்ன. இந்த அமிலத்தன்மை கொஞ்சம் கடுமையான வாசனை வீசக் காரணமாக இருக்கிறது.பூண்டில் உள்ள இந்த அல்லிசின் பண்பு ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.​

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூண்டு

பூண்டில் உள்ள சல்ஃயூரிக் அமிலம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதோடு இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதனால் கார்டியோ வாஸ்குலர் நோய்களின் ஆபத்தைக் குறைக்க உதவி செய்கிறது.பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தையும் கெட்ட கொலஸ்டிராலான எல்டிஎல் கொலஸ்டிராலையும் குறைக்கச் செய்யும். குறிப்பாக நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்ய உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.​

ஜீரணத்தை மேம்படுத்தும் பூண்டு

காலையில் வெறும் வயிற்றில் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவதன் மூலம் ஜீரண மண்டலத்தின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டு ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

உடலை டீடாக்ஸ் செய்யும் பூண்டு

காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகள் நம்முடைய உடலில் சேருவது தான் ஆற்றலாக மாறும்.உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய வேண்டியது மிக முக்கியம். அப்படி டீடாக்ஸ் செய்வதற்கு பூண்டு உதவி செய்யும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை பச்சையாகச் சாப்பிடும்போது அது ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கெட்ட கொலஸ்டிராலைக் கரைத்து வெளியேற்றி கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவி செய்கிறது.​

நீரிழிவை தடுக்க உதவும் பூண்டு

பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடலில் இன்சுலின் உணர்திறனைத் (insulin sensitivity) தூண்டி, ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்கவும் நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.குறிப்பாக, ப்ரீ – டயாபடீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது மிக உதவியாக இருக்கும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times