பெயரை மாற்றிய நாடுகள்.. அடேங்கப்பா என்ன லிஸ்ட் பெருசா போகுது… முழு விவரம்!

குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கான இரவு விருந்து நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவர்’ என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடுவது இதுவே முதல்முறை. முன்னதாக சில நாடுகள் பல காரணங்களுக்காக தங்களது பெயரை மாற்றி வைத்துள்ளன. தங்களது பெயர்களை மாற்றி வைத்துக்கொண்ட சில நாடுகளைப் பற்றி இங்கு காணலாம்.

துருக்கியே – முன்பு துருக்கி

துருக்கி என்று இருந்த பெயரை அந்நாட்டு அதிபர் எர்டோகன் துருக்கியே என்று மாற்றி 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இந்த மாற்றம் என்பது நாட்டின் வளமான கலாச்சாரம், மற்றும் நாகரீகத்தை உலக அரங்கில் சிறப்பாக வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

செக்கியா – முன்பு செக் குடியரசு

செக் குடியரசு நாட்டின் பெயர் 2016ஆம் ஆண்டு செக்கியா என்று மாற்றம் செய்யப்பட்டது. பெயரை எளிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது என்றும், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் முயற்சிகளில் இதன்மூலம் அங்கீகாரம் பெற்றது என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து – முன்பு ஹாலந்து

ஹாலந்து என்ற பெயர் விளம்பர நோக்கங்களுக்கான 2020ஆம் ஆண்டு நெதர்லாந்து என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. இது தங்களை ஒரு திறந்த மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நாடாக சர்வதேச அரங்கில் பிரதிபலிப்பதாக அந்நாடு கருதுகிறது.

​வடக்கு மாசிடோனியா குடியரசு – முன்பு மாசிடோனியா

நேட்டோவில் சேருவதற்காகவும், கிரீஸ் நாட்டில் மாசிடோனியா என்ற பகுதி உள்ள நிலையில் அதில் இருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டவும், மாசிடோனியா என்கிற தங்களது பெயரை 2019ஆம் ஆண்டு வடக்கு மாசிடோனியா குடியரசு என மாற்றியது அந்நாட்டு அரசு.

​இலங்கை – முன்பு சிலோன்​

இலங்கை தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், ஆங்கிலேயே மற்றும் போர்த்துகீசிய ஆட்சிகளின் வரலாற்று எச்சங்களை அகற்றவும் சிலோன் என்ற காலணித்துவ பெயரை பெயரை துறந்தது. 2011ஆம் ஆண்டு முதல் சிலோன் என்ற பெயர் இலங்கையின் அதிகாரப்பூர்வ அமைப்புகளில் இருந்து நீக்கப்பட்டது.

​அயர்லாந்து – முன்பு ஐரீஷ் மாநிலம்

1937 ஆம் ஆண்டில், அயர்லாந்து ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது, அயர்லாந்து என மறுபெயரிட்டு அதிகாரப்பூர்வமாக குடியரசு நாடாக மாறியது.

தாய்லாந்து – முன்பு சயாம்

சயாம் என்ற சமஸ்கிருத பெயர் 1939ஆம் ஆண்டு தாய்லாந்து என மாற்றம் செய்யப்பட்டது. 1946 -48 ஆண்டுகளுக்கு இடையில் சியாம் என சுருக்கமாக அழைத்தனர். பின்னர், அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து ராஜ்ஜியமாக மாறிய நிலையில், இன்றும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.

​மியான்மர் – முன்பு பர்மா

1989ஆம் ஆண்டு பர்மா என்ற பெயரை அந்நாட்டு அரசு மியான்மர் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியது. பர்மா என்ற பெயர் இன்றளவில் பேச்சு வழக்கில் உள்ள நிலையில் இலக்கிய பெயராக துல்லியமாக மியான்மர் உள்ளது.

கம்போடியா

கம்போடியா நாட்டிற்கு இதற்கு முன்பு பல்வேறு முறை பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கெமர் குடியரசு, ஜனநாயக கம்பூச்சியா, கம்போடியா மாநிலம் மற்றும் கம்போடியா இராச்சியம் என அதன் பெயர் மாற்றமே சிக்கலான அதன் வரலாற்றை பிரதிபலிக்கிறது.

​ஈரான் – முன்பு பெர்சியா

பெர்சியா என்ற பெயர் 1935ஆம் ஆண்டு ஈரான் என மாற்றம் செய்யப்பட்டது. நாடும், மக்களும் எவ்வாறு எவ்வாறு அடையாளம் காணப்பட்டனர் என்பதை வைத்து பெயரை மாற்றியது. பெர்சியா எப்படி ஈரானாக மாறியது என்பது குறித்து ஈரானியர்கள் இடையே இன்னும் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times