பிரித்தானியாவில் ரூ.49 கோடி மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருடப்பட்ட விவகாரம்: சிக்கிய நால்வர்!

ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து 4.8 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கக் கழிவறை திருடப்பட்ட வழக்கில், நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பயன்படுத்தமூன்று நிமிடங்கள்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான ஆக்ஸனில் உள்ள வூட்ஸ்டாக்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த கழிப்பறை கொள்ளை போனது.

பார்வையாளர்களுக்கும் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மட்டுமின்றி, மூன்று நிமிடங்கள் பயன்படுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது James Sheen, Michael Jones, Fred Doe மற்றும் Bora Guccuk ஆகிய நால்வர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. குறித்த கழிப்பறையானது இத்தாலிய கலைஞரான Maurizio Cattelan உருவாக்கியாதாகும்.

சர்ச்சிலின் பிறந்த இடம்

2016ல் நியூயார்க்கில் அமைந்துள்ள Guggenheim அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த கழிப்பறை ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்டது.

இந்த நிலையிலேயே 2019 செப்டம்பர் 14ம் திகதி அந்த கழிப்பறை திருடப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரும் எதிர்வரும் 28ம் திகதி ஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்

.மார்ல்பரோ பிரபுக்களின் குடியிருப்பு இந்த ப்ளென்ஹெய்ம் அரண்மனை என்பதுடன், இங்கிலாந்தின் மிகப்பெரிய மாளிகைகளில் ஒன்றான இந்த அரண்மனை 1705 மற்றும் சுமார் 1722 க்கு இடையில் கட்டப்பட்டதாகும்.1987ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது. இந்த மாளிகை தான் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடம் மற்றும் மூதாதையர் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times