ட்விட்டர் பயனர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சொன்ன சொல்லை காப்பாற்றிய எலான் மஸ்க்

பயனர்களுக்கு வருவாய் வழங்கும் திட்டம்

 ட்விட்டர் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு விளம்பர தொகையில் பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டத்தை செயல்பாட்டுக் கொண்டுவந்துள்ளது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் தங்களுடைய ட்வீட்-க்கு  பணம் பெற தொடங்கியுள்ளனர்.

ட்விட்டர் பயனர்கள் தங்களது ட்வீட்களுக்கு வருவாய் ஈட்டும் புதிய திட்டம் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது ட்விட்டர் பயனர்கள் வருமானம் ஈட்டி கொள்ளும் புதிய வருவாய் திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட்  சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய பயனர்கள் யாரும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகள்

இந்த விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் நிச்சயமாக ட்விட்டர் புளூ சந்தாவில் இணைந்து இருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருக்க வேண்டும்.

அத்துடன் கடந்த 3 மாதங்களில் ட்வீட்டுக்கு சுமார் 50 லட்சம் பார்வையாளர்களையாவது பெற்று இருப்பது அவசியம்.

elon musk twitter ad revenue sharing plan:ட்விட்டர் பயனர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சொன்ன சொல்லை காப்பாற்றிய எலான் மஸ்க்Reuters 

மேலும்  ட்வீட்டரின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் பூர்த்தி செய்து இருக்க வேண்டியது அவசியம். 

வருவாய் ஈட்டிய நபர்கள்

ட்வீட்டரின் தற்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கான விளம்பர வருவாய் பங்கீட்டு திட்டம் மூலம் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் 25,000 டொலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 21 லட்சம்) வருவாய் ஈட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதைப்போன்று பல பயனர்கள் 5 லட்சம் வரை வருவாய் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times