அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண், தனது பிறந்த குழந்தையை மருத்துவமனையின் குப்பை தொட்டியில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் உள்ள மருத்துவமனையின் கழிப்பறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அலெக்ஸி ட்ரெவிசோ(Alexee Trevizo) என்ற 19 வயதுடைய பெண், அங்குள்ள குப்பை தொட்டியிலேயே குழந்தையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்கு முன்பு, நியூ மெக்சிகோவில் உள்ள மருத்துவமனைக்கு அலெக்ஸி ட்ரெவிசோ கடுமையான முதுகு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிப்பறைக்கு சென்று பூட்டிக் கொண்ட அலெக்ஸி ட்ரெவிசோ, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் மருத்துவமனை ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில், கழிப்பறை கதவினை போராடி திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது அலெக்ஸி ட்ரெவிசோ உபயோகித்த கழிப்பறையின் தளம் முழுவதும் படிந்து இருந்த இரத்தத்தை துடைத்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தான் கருவுற்று இருப்பதை அறிந்து அவர் தன்னை தானே வருத்திக் கொள்ள முயற்சித்து இருக்கிறார் என்று மருத்துவமனை ஊழியர்கள் முதலில் அச்சப்பட்டனர்.
ஆனால் சிறிது நேரத்தில் மருத்துவமனை செவிலியர் ஒருவர் குப்பை தொட்டியில் போடப்பட்டு இருந்த இறந்த குழந்தையின் உடலை கண்டுபிடித்தார்.
16 ஆண்டுகள் சிறைத் தண்டனை:
இதை உடனடியாக இளம்பெண்ணிடம் மருத்துவர் விசாரித்தனர், இதற்கிடையில் அலெக்ஸி ட்ரெவிசோ-வின் தாய் உண்மையை கூறும்படி வற்புறுத்தவே, தான் யாருடனும் உறவில் ஈடுபடவில்லை என்றும், நான் எவ்வாறு கருவுற்றேன் என்று தெரியவில்லை, அதனால் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியவில்லை என்று அலெக்ஸி ட்ரெவிசோ தன்னுடைய தாயிடம் தெரிவித்தார்.
அத்துடன் குழந்தையை வெளியே வந்த போது அழாமல் எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு செய்து விட்டேன் என்றும் ஒத்துக் கொண்டார்.
இதையடுத்து அவர் மீது முதல் தர கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது, அத்துடன் கடந்த மாதம் அவருக்கு 16 ஆண்டுகளுக்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் மீது முதல் தர கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது, அத்துடன் கடந்த மாதம் அவருக்கு 16 ஆண்டுகளுக்கான சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.