10 C
Munich
Friday, October 18, 2024

“திரும்பிய பக்கமெல்லாம் தங்கம்!” விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்! ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்! என்னாச்சு

“திரும்பிய பக்கமெல்லாம் தங்கம்!” விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்! ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்! என்னாச்சு

Last Updated on: 15th July 2023, 05:15 pm

வாஷிங்டன்: அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் வயல் ஒன்றில் திடீரென தோண்ட தோண்ட தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒருவருக்கு எப்படி, எப்போது லக் அடிக்கும் என்று யாருக்குமே தெரியாது. தினசரி வேலையைச் செய்து கொண்டிருப்பவருக்குக் கூட திடீரென லக் அடித்தால் ஒரு நாளில் வாழ்க்கையே மாறிவிடும். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

அப்படியொரு சம்பவம் தான் ஒருவருக்கு நடந்துள்ளது. அவரது விவசாய நிலத்தைத் தோண்டத் தோண்ட உள்ளே இருந்து தங்க நாணயங்கள் வந்துள்ளது. இதைப் பார்த்து அவரே ஒரு நொடி ஷாக் ஆகிவிட்டராம்.

அமெரிக்கா: உலக வல்லரசான அமெரிக்காவில் கடந்த 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. நாட்டில் அடிமை தொடர்வது குறித்த விவகாரத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மோதிக் கொண்டன. இதனால் கடந்த 1861 முதல் 1965ஆம் ஆண்டு வரை அமெரிக்கா முழுக்க உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. அந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பற்றி எரிந்தது என்ற சொல்லலாம். அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

அப்படி உள்நாட்டுப் போர் சமயத்தில் யாரோ சிலர் புதைத்து வைத்த தங்க நாணயங்களால் தான் இப்போது விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள சோள விவசாயி ஒருவர் ஏதோ காரணத்திற்காகத் தனது வயலை தோண்டியுள்ளார். அப்போது அங்கே தங்க நாணயங்கள் இருந்துள்ளன. ஏதோ சில நாணயங்கள் இல்லை. தோண்டத் தோண்டத் தங்க நாணயங்கள் வந்து கொண்டே இருந்துள்ளது.

தங்க நாணயங்கள்: இப்படி மொத்தம் 700 தங்க நாணயங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டப்படி அவரது நிலத்தில் கண்டுபிடிக்கப்படும் அனைத்து பொருட்களும் உரிமையாளருக்குச் சொந்தம் என்பதால், இப்போது அந்த தங்க நாணயங்களை விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கோடிகளைச் சம்பாதித்துத் தரப் போகிறார்.

இங்குள்ள புளூகிராஸ் என்ற இடத்தில் தான் இந்த “கிரேட் கென்டக்கி ஹோர்ட்” கண்டுபிடிக்கப்பட்டது. இவை உள்நாட்டுப் போர்க் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகியுள்ள நிலையில், அது விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் துல்லியமாக எங்கே தங்கம் கண்டறியப்பட்டுள்ளது.. அதன் உரிமையாளர் யார் என்பது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.

அரிதான தங்க நாணயங்கள்: இது குறித்து தங்கத்தை விற்கும் சம்மந்தப்பட்ட நிறுவனம் கூறுகையில், “அவர் தனது வயலை தோண்டிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தில் பல தங்க நாணயங்கள் புதைத்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். இதை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார். 1840 முதல் 1863 வரையிலான காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த 1, 10, 20 ஆகிய தங்க நாணயங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக 1863இல் பிலடெல்பியாவில் அச்சிடப்பட்ட 18 மிகவும் அரிதான $20 தங்க நாணயங்களும் இருந்துள்ளது. இது ரொம்பவே அரிதான தங்க நாணயமாகக் கருதப்படுகிறது. 1861-1865 வரை நடந்த உள்நாட்டுப் போரில் கென்டக்கி மாகாணம் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இதனால் அப்போது பல இடங்களில் இருந்தும் மக்கள் பாதுகாப்பு கருதி கென்டக்கி மாகாணத்திற்குச் சென்றனர். இதனால் கென்டக்கி மாகாணத்தில் இப்படிப் பல புதையல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here