Apple iPhone 15 launch : ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல் இன்று வெளியிடப்படவுள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் சீரிஸை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஆப்பிளின் ‘Wonderlust’ ஈவன்ட் இன்று ( செப்டம்பர் 12) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 உள்ளிட்ட மாடல்கள் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
ஐபோன் 15 சீரிஸில் இடம்பெறும் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல்களில் Dynamic Island உள்ளிட்ட சில பொதுவான அம்சங்களை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது Dynamic Island அம்சந்தை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. இந்த நிலையில் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் லைன்அப்-ல் இடம்பெறும் அனைத்து மாடல்களுக்கும் Dynamic Island அம்சம் வழங்கப்பட கூடும்.