நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் யூசர்கள் அனைவருமே தங்களுடைய நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதனை கட்டுப்படுத்த விரும்பிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், நெட்பிளிக்ஸ் கணக்குகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் யூஸர்களுக்கு இந்த முறை அமலுக்கு வந்துள்ளது நெட்பிளிக்ஸ் யூசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி யுஎஸ்-ல் இருக்கும் நெட்பிளிக்ஸ் யூஸர்கள் தங்களது நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமல்படுத்தப்பட்ட இந்த முறையானது அதன் பின்னர் கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க விரும்புவதால் தங்களுடைய விளம்பரங்களின் மூலமாகவே தற்போது வரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வருவாய் ஈட்டுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் யூஎஸ்-ஐ பொறுத்தவரை இனிமேல் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெட்பிளிக்ஸ் கணக்கை பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில், அந்த கணக்கின் உரிமையாளர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரியவந்துள்ளது. நெட்பிளிக்ஸ் அளித்துள்ள அறிக்கையின் படி, ஒரு நெட்லிக்ஸ் கணக்கை வீட்டில் வசிக்கும் அனைவருமே பயன்படுத்த முடியும்.
அந்த வீட்டில் உள்ள அனைவரும், வீட்டிலிருந்தாலும் அல்லது வெளியே சென்றிருந்தாலும் கூட நெட்பிளிக்ஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் நெட்பிளிக்ஸின் புதிய வசதியான “ட்ரான்ஸ்ஃபர் ப்ரொபைல் மற்றும் மேனேஜ் ஆக்சஸ் அன்டு டிவைசஸ்” ஆகியவை நெட்பிளிக்ஸ் கணக்கை பயன்படுத்துவதை இன்னமும் எளிமையாக்குகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெட்லிஸ் கணக்கை பகிர்ந்து கொள்ள கணக்கின் உரிமையாளர் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? : நெட்லிக்ஸ் தெரிவித்துள்ளபடி ஒரே வீட்டில் வசிக்கும் மற்றொருவருடன் கணக்கின் உரிமையாளர் தனது நெட்பிளிக்ஸ் கணக்கை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக ஒரு மாதத்திற்கு கணக்கின் உரிமையாளர் அமெரிக்க மதிப்பில் 7.99 டாலர்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது மாதத்திற்கு ரூபாய் 661 ஆகும். இந்த கட்டணமானது அமெரிக்க சந்தையில் இருக்கும் நெட்பிளிக்ஸ் யூசர்களுக்கு மட்டும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உலகின் மற்ற பகுதிகளில் வசிக்கும் நெட்பிளிக்ஸ் யூசர்களுக்கு அந்நிறுவனம் வெவ்வேறு விதமான உத்திகளை பின்பற்றும் என்று தெரிகிறது.தற்போது நெட்பிளிக்ஸ் பேசிக் மற்றும் ஸ்டாண்டர்ட் என இருவகை பலன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த பிளானை தேர்ந்தெடுப்பவர்களுக்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பேசிக் பிளானில் 9.99 டாலர்களுக்கும், ஸ்டாண்டர்ட் பிளானில் 6.99 டாலர்களுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.