குவைத்தின் உள்துறை அமைச்சகம், வெளிநாட்டவர்களுக்கு ஃபேமிலி மற்றும் விசிட் விசா வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டவர்களுக்கு ஃபேமிலி மற்றும் விசிட் விசா வழங்குவதை நிறுத்துமாறு ஆறு கவர்னரேட்டுகளிலும் உள்ள வதிவிட விவகாரத் துறைக்கு அமைச்சகம் தொடர்புடைய அறிவுறுத்தல்களை வழங்கியதாக அல் ராய் ஆதாரங்களை மேற்கோள் காட்டினார்.
ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் மட்டுமே இந்த முடிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஏற்கனவே விசா வழங்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியும் எனவும் விளக்கியுள்ளார்.
ஆதாரங்களின்படி, இந்த இடைநீக்கம் நடைமுறையில் இருக்கும் போது ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.