UAE: ஷேக் ஹம்தான், துபாயில் நன்மையான செயல் புரிந்த டெலிவரி பைக் ரைடரைப் வெகுவாக பாராட்டினார்.

துபாய்: துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் துபாய் சாலை சந்திப்பில் இருந்து கான்கிரீட் தடுப்புகளை அகற்றும் வீடியோவில் காணப்பட்ட டெலிவரி பைக் ரைடர் பற்றிய தகவல்களைக் கேட்டார்.


“துபாயில் ஒரு நல்ல செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. யாராவது என்னை இந்த மனிதரிடம் சுட்டிக்காட்ட முடியுமா? என்று ஷேக் ஹம்தான் தனது ட்வீட்டில் கேட்டார், அதில் 22-வினாடி கிளிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் டெலிவரி டிரைவர் ஒருவர் கடுமையான வெயிலில் டிராபிக் சிக்னலில் பொறுமையாக நிற்பதைக் காட்டுகிறது, அவர் சாலையின் நடுவே கண்ட தடுப்புகளை அகற்றுவதற்காக சிக்னலில் காத்திருந்து. அதன்பின் சாலையின் நடுவில் கிடந்த இரண்டு தடுப்புகளை ஒவ்வொரு கையிலும் ஒரு கான்கிரீட் தடுப்பை எடுத்து சாலையில் இருந்து தூக்கி ஓரமாக எறிவதை காணமுடிகிறது. பின்னர் அவர் தனது பைக்கை நோக்கி விரைந்தார், இந்த செயலை சமூக வலைத்தளத்தில் கண்ட துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அந்த செயலை புறிந்ததற்காக அந்த நபரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரிகளில் ஒரு பதிவை வெளியிட்டார் அதில்: “நல்ல மனிதன் கண்டுபிடிக்கப்பட்டான். நன்றி அப்துல் கஃபூர், நீங்கள் ஒரு இறக்கமுடையவர். நாம் விரைவில் சந்திப்போம்!” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைந்து கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times