நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸ் முழுவதும் பெய்த கனமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அமீரகத்தில் வெள்ளம் காரணமாக ஆசிய நாட்டினரைச் சேர்ந்த 6 பேர் இறந்துள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் வருந்துகிறோம்” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் டாக்டர் அலி சலேம் அல் துனைஜி கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும் தேடுதல் பணிக்குப் பிறகு ஏழாவது ஆசிய நபர் இறந்துவிட்டதாக அமைச்சகத்தின் தகவல் வந்திருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த இரண்டு நாட்கள் மோசமான வானிலை நிலவியது, இதில் வரலாறு காணாத மழையும் இருந்தது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்களில், இடைவிடாத மழையால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் சிக்கித் தவித்தது வருகின்றனர்.
கடந்த 27 ஆண்டுகளில் நாடு கண்டிராத அதிக மழை அமீரகத்தில் பெய்ததால் புஜைராஜ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்ளுங்கள்..