9 C
Munich
Friday, September 20, 2024
Home Blog Page 120

சவூதி: கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமையன்று ஜித்தாவின் குலைஸ் என்ற இடத்தில் இந்த பயங்கர விபத்து நடந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. துவாலில் உள்ள உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினர் சென்றிருந்தனர். திரும்பி வந்து கொண்டிருந்த போது குலைஸ் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.

ஜித்தா இந்தியன் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் அயன் முஹம்மது நியாஸ், 9ம் வகுப்பு படிக்கும் இக்ரா நியாஸ், 2ம் வகுப்பு படிக்கும் அனஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் இனாயத் அலி, தௌபிக் கான் ஆகியோர் உயிரிழந்தனர். இறந்த மூன்று குழந்தைகளும் உடன்பிறந்தவர்கள். சட்ட நடைமுறைகள் முடிந்து அனைவரது உடல்களும் புதன்கிழமை சவுதி அரேபியாவில் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்வதோடு, எங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் இணைந்து கொள்ளுங்கள்.. 🙂

குவைத்: வளைகுடா நாடுகளில் Cost of Living வாழ்வதற்கு மலிவான நாடாக குவைத் தேர்ந்து தெடுக்கப்படுள்ளது..

ஜூலை 12: உலகின் வாழ்க்கைச் செலவுகள் குறித்த மிகப்பெரிய தரவுத்தளங்களில் ஒன்றான Numbeo இணையதளம், இந்த ஆண்டின் முதல் பாதியில் வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் மலிவான வளைகுடா நாடாக குவைத்தை தரவரிசைப்படுத்தியுள்ளது. இது அரபு உலகில் ஒன்பதாவது மலிவானது என்று அல்-ராய் நாளிதழ் தெரிவித்துள்ளது. Numbeo இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வாழ்க்கைச் செலவுக் குறியீட்டை வெளியிடுகிறது, இது உலகெங்கிலும் உள்ள 137 நாடுகளில் உள்ள நுகர்வோர் பொருட்களின் விலைகளை அளவிடும் ஒரு ஒப்பீட்டுக் குறியீடாகும், இதில் மளிகைப் பொருட்கள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் பயன்பாடுகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், வாடகை அல்லது அடமானம் போன்ற தங்குமிடச் செலவுகள் இதில் இல்லை.

அரபு நாடுகளில், லெபனான் மிகவும் விலையுயர்ந்த நாடாகவும், உலகளவில் 18 வது இடத்தையும், கத்தார் இரண்டாவது இடத்தையும், 30 வது இடத்தையும் பெற்றுள்ளது, பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகளவில் 35 வது இடத்தையும், பஹ்ரைன் 40 வது இடத்தையும், சவுதி அரேபியா 44 வது இடத்தையும், பாலஸ்தீனம் 45 வது l இடத்தையும், ஓமான் 50 வது இடத்தையும், ஜோர்டான் 52 வது இடத்தையும் பிடித்தது. உலக அளவில் குவைத் 56வது இடத்தில் உள்ளது. L லிபியா, அல்ஜீரியா, துனிசியா, சிரியா மற்றும் எகிப்து ஆகியவை குறைந்த விலையில் வாழக்கூடிய அரபு நாடுகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மறுபுறம், வாடகை அதிகரிப்பின் அடிப்படையில் வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்களுக்கு அடுத்தபடியாக குவைத் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் இத்தாலி, சீனா போன்ற பல ஐரோப்பிய நாடுகளை விட குவைத் உயர்ந்தது. வாங்கும் திறன் குறியீட்டின் அடிப்படையில், அரபு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக குவைத் நான்காவது இடத்தைப் பிடித்தது. அதாவது இந்த குறிகாட்டியானது, ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள சராசரி நிகர சம்பளத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நகரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் தனிநபர் ஒருவரின் ஒப்பீட்டு வாங்கும் திறனைக் காட்டுகிறது.

Purchase power per individual in purchasing good and services in a particular city for the avarage net salary in that city.

UAE: Eid விடுமுறையில் ஒரே நேரத்தில் 35-40,000 பேர் குவிந்ததால் ஸ்தம்பித்த ஜபல் ஜெய்ஸ் மலை.

ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணிகள், குடியிருப்பாளர்களும் விடுமுறையை கொண்டாட ஜெபல் ஜெய்ஸின் மலை சிகரத்திற்கு சென்றுள்ளனர். அதன் படி, முதல் இரண்டு நாட்களில் சுமார் 13,000
வாகனங்கள் ஜெபல் ஜெயிஸ்
மலை உச்சத்திற்கு சென்றதாக
கணக்கிடப்பட்டுள்ளது.

ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் 13,000
வாகனங்களில் 35,000-40,000-க்கும்
மேற்பட்ட பார்வையாளர்கள்
ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு
சென்றதாக கூறப்படுகிறது, மேலும்
மூன்றாம் நாள் மற்றும் இறுதி ஈத் விடுமுறை நாளான நேற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெபல் ஜெய்ஸின் 36 கிமீ நீளமுள்ள சாலையில் அல் புரைரத் மற்றும் வாடி கடாவிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலை சிகரம் வரை போக்குவரத்தை ஒழுங்கமைக்க போலீஸ் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹஜ் 2022: அரஃபாவில் இன்று நடைபெற்ற  ஜும்மா பேரூரை தமிழில் (காணொளி)

இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்கள் புனித மக்காவிற்கு பயணம் செய்துள்ளனர், துல் ஹஜ்ஜா பிறை 9 ஆம் நாளான இன்று ஹஜ் கடமைகளில் ஒன்றான  ஹாஜிகள் அரஃபா திடலில் ஒன்றுகூட வேண்டும்.

அதன்படி இன்று ஹாஜிகள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமித்தனர், மேலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தினம் என்பதால் அரஃபாவில் இன்று ஜும்மாவுடன் கூடிய குத்பாவும் நடைபெற்றது, மிகவும் பிரசித்தி பெற்ற அரஃபாவின் ஜும்மா குத்பா இவ்வாண்டு அதன் மொழிபெயர்ப்பு 14 மொழிகளில் இடம்பெற்றது, முதல் முறையாக நம் தமிழ் மொழியும் இவ்வாண்டு இடம்பெற்றுள்ளது தமிழர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..

அந்த தமிழாக்கம் தற்போது காணொளியாக வெளிவந்துள்ளது. கீழ் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து காணவும்..

இதனை வழங்கியவர்களுக்கு இறைவன் ஈருலகிலும் வெற்றியை தாருவானாக…

ஆமீன்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் அறிவிப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் ஈத் அல் அதா சிறப்பு தொழுகைக்கு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் ஈத் தொழுகைக்கான நேர பட்டியல் இதோ:

அமீரகம் முழுவதும் ஈத்
தொழுகைக்கான நேரம்:

-அபுதாபியில் காலை 5.57மணி
-அல் ஐனில் காலை 5.51 மணி
-மதினத் சயீதில் காலை 6.02மணி
-துபாயில் காலை 5.53 மணி
-ஷார்ஜாவில் காலை 5.52மணி
-அஜ்மானில் காலை 5.52 மணி

மேலும் அமீரகத்தில் ஈத் அல் அதாவின் முதல் நாளில், வழிபாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, குத்பா மற்றும் தொழுகைகான நேரம் 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுதி பாலைவனத்தில் தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த 7 வயது மகன் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளார்

சவுதி அரேபியாவில் பாலைவனத்தின் நடுவே சிக்கி தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபிய நபரும் அவரது ஏழு வயது மகனும் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தனர்.

கார் பழுதடைந்தது

துரதிர்ஷ்டவசமாக, டிரக் பழுதடைந்து போனது, பல முயற்சிகளுக்குப் பிறகும் பழுதுபார்க்கவில்லை. தந்தை களைத்துப் போனார். உதவிக்கு அழைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. நம்பிக்கையின்றி இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

தந்தை தாகத்தால் இறந்தார்
ஏற்கனவே களைத்து தாகத்தில் இருந்த தந்தை சரிந்து விழுந்தார். அதிக வெப்பநிலை காரணமாக அவரால் தொடர்ந்து நடக்க முடியாமல் அங்கு அவர் இறந்தார்.

மகனும் தாகத்தால் இறந்தான்
மகன் கால் நடையாக பயணத்தைத் தொடர்ந்தார், ஆனால் சில கிலோமீட்டர் தூரத்தில் தாகம் மற்றும் சோர்வு காரணமாக அவரும் இறந்துவிட்டார். அவரது உடல் தந்தைக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

மீட்புக் குழுவினர் தாமதமாக வந்தனர்
அவர்களைக் காணவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து, சவுதி மீட்புக் குழுவினர் அவர்களைத் தேடத் தொடங்கினர். ஆனால், பாலைவனத்தின் நடுவில் அவர்கள் இறந்து கிடப்பதைக் கண்டனர். அவர்களது லாரியும் மணலில் சிக்கியது.

சவுதி அரேபியாவின் அஜ்மான் பள்ளத்தாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு குழுவினர் உடல்களை பிரின்ஸ் சுல்தான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடல்கள் அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இழந்த மக்களை எப்படி காப்பாற்றுவது?

இந்த சம்பவம் அதிகம் நடக்கும் அல் ஜூஃப் மாகாணத்தில் தொலைந்து போன மக்களுக்கு வழிகாட்ட சவுதி அரசு பல சூரிய சக்தி லேசர் விளக்குகளை நிறுவியுள்ளது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு நாட்களுக்கு தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும், ஹாஜிகள் வந்து சேர்ந்த நான்காவது நாள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயமாக கோவிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று NCEMA தெரிவித்துள்ளது.

தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், யாத்திரிகள் நெகடிவ் முடிவைப் பெற்ற பிறகு அல் ஹோஸ்ன் செயலியில் கிரீன் நிறத்தை பெறுவார்கள். யாத்திரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களில் கோவிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வசதி உண்டு. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் சுகாதார மையத்திற்கு தெரிவிக்கவும், தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தவும்

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

தமிழகம்: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை இருந்து வந்த பாடவேளை குறைப்பு-பள்ளி கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடவேளையில் புதிதாக ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

ஈத் அல் அதா 2022: ஈத் கொண்டாட்டங்களுக்கான COVID-19 வழிகாட்டுதல்களை UAE வெளியிடுகிறது

அபுதாபி: தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வருகின்ற ஜூலை 9 சனிக்கிழமையன்று கொண்டாட இருக்கும் ஈத் அல் அதாவிற்கான COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

பாதுகாப்பான ஈத் வழிகாட்டுதல்களை NCEMA சிறப்பு ஊடக சந்திப்பின் போது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Dr. தாஹிர் அல் அமெரி திங்களன்று அறிவித்தார்.

“அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான அதன் செயல்திறன் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், அத்துடன் சமீபத்தில் அதிகரித்திருக்கும் நோய்த்தொற்றுகளின் நிலைமையைச் சரிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையானது தயார்நிலையை உறுதிப்படுத்துவதாக” இருக்கின்றது என்று டாக்டர் அல் அமெரி கூறினார்.

ஈத் நாளில் விடியற்காலை தொழுகைக்குப் பிறகு மசூதிகள் மற்றும் பிரார்த்தனை கூடங்கள் திறக்கப்படும். ஈத் தொழுகை மற்றும் நிகழ்வுகள் 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் மசூதிகளைச் சுற்றியுள்ள வெளிப்புற இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றக்கூறி ஸ்டிக்கர்களும் ஒட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் கூடுவது, கைகுலுக்கல் மற்றும் உடல் ரீதியான வாழ்த்துக்களை தவிர்க்கவும், வாய்மொழி வாழ்த்துக்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

அமீரகத்தில் ஒரு 1 கிலோ தங்ககம் வெல்லும் வாய்ப்பு Mahzooz வழங்கும் “Golden Summer Draw” கலந்துகொள்வது எப்படி?

அமீரகத்தில் நடைபெறும் Mahzooz Drawவில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு Mahzooz Golden Summer Drawவில், 22 கேரட் 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இதில் கலந்துகொள்வது?

பங்கேற்பாளர்கள் யாரும் இதற்கென்று தனியாக பங்கேற்க தேவையில்லை, ஜூலை 2022ல் Mahzooz வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் தானாகவே Golden Summer Drawவிற்கு தகுதிபெருவார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.mahzooz.ae என்ற இணையதளம் மூலம் இந்த Mahzooz Drawவில் அனைவரும் பங்கேற்கலாம், ஒரு தண்ணீர் பாட்டிலை Dh35க்கு வாங்கி நேரடியாக Mahzooz மற்றும் இந்த Golden Summer Drawவில் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு வாரமும், பங்கேற்பாளர்கள் முதல் பரிசான 10,000,000 திர்ஹங்களையும், இரண்டாம் பரிசான 10,00,000 திர்ஹங்களையும் மற்றும் மூன்றாம் பரிசாக 350 திர்ஹங்களையும் வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

2,00,000,000 திர்ஹம்களுக்கு மேல் பரிசுத் தொகையை வழங்கிய Mahzooz, இது பெரிய வெகுமதிகளை வழங்கும் முன்னணி வாராந்திர டிராவாகும்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.