11.6 C
Munich
Friday, September 20, 2024
Home Blog Page 121

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்
ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனது
பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற EK430 ரக விமானம் பயணத்தின்போது
தொழில்நுட்பக் கோளாறை
சந்தித்தது” என்று கூறப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்பதற்காக விமானம் பிரிஸ்பேனில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 7நியூஸ் பிரிஸ்பேன் செய்தியில், விமானம் புறப்படும் போது விமானத்தின் டயர் வெடித்ததாகவும், அது பிரிஸ்பேனில் தரையிறங்கியதும், அதன் Fuselageல் ஒரு ஓட்டையுடன் தரையிறங்கியதாகவும் கூறியது.

“எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கின்றது, “எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இதுபோன்ற பல முக்கியமான தகவலகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கு இஹ்ராம் அணிய வேண்டிய மீக்காத் எல்லை எங்கெல்லாம் உள்ளது?

மீக்காத் எல்லை என்பது மக்காவின் புனித ஹரம் ஷரிப்க்கு நுழைவதற்கு முன்பு இஹ்ராம் என்னும் ஆடையை அணிய வேண்டும் அந்த ஆடையை அணிவதற்கான எல்லைதான் மீக்காத் எல்லை எனப்படும்.

மக்காவைச் சுற்றி ஐந்து மிகாத்கள் உள்ளன. அவற்றில் நான்கு நபி (ஸல்) அவர்களால் நிறுவப்பட்டது, மற்றொன்று உமர் (رضي الله عنه) அவர்களின் கலிபா காலத்தில் நிறுவப்பட்டது.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (رضي الله عنه) கூறினார், “அல்லாஹ்வின் தூதர் துல் ஹுலைஃபாவை அல்-மதீனா மக்களுக்கான மிகாத் என்றும், அஷ்-ஷாம் மக்களுக்கு அல்-ஜோஃபா என்றும், நஜ்த் மக்களுக்கு கர்ன் என்றும், யலம்லாம் யேமன் மக்களுக்கு என்றும் கூறினார்கள்.” [புகாரி]

துல் ஹுலைஃபா மீக்காத்

The Dhul Hulaifah Miqat – Photo: Wikimedia Commons

இது மதீனாவில் உள்ள மஸ்ஜித்-இ-நப்வியிலிருந்து தென்மேற்கே 10 கிமீ தொலைவிலும், மக்காவிலிருந்து 450 கிமீ வடக்கேயும் அமைந்துள்ளது.
துல் ஹுலைஃபா மதீனாவில் வசிப்பவர்களுக்கும், அந்தத் திசையிலிருந்து மக்காவை அணுகுபவர்களுக்கும் மிகாத் ஆகும்.
இப்பகுதிக்கு அப்யார் அலி என்றும் பெயர் உண்டு.

தாத் இர்க் மிகாத்

The Dhat-Irq Miqat – Photo: Wikimedia Commons

இது மக்காவில் இருந்து வடகிழக்கில் 94 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, ஈராக், ஈரான் மற்றும் அந்த பொது திசையில் இருந்து மக்காவிற்கு பயணிப்பவர்களுக்கு மிகாத் ஆக செயல்படுகிறது.
தாத் இர்க் மிகாத் கலிஃபா உமர் (رضي الله عنه)  ஆட்சிகாலத்தில் பாஸ்ரா மற்றும் கூஃபாவை கைப்பற்றிய பின்னர் நிறுவப்பட்டது.
இர்க் அஸ்வத் என்ற பகுதியில் உள்ள ஒரு பெரிய மலையின் பெயரால் இந்த பகுதிக்கு பெயரிடப்பட்டது.

கர்ன் அல்-மனாசில் மீக்காத்

The Qarn al-Manazil Miqat – Photo: Wikimedia Commons

இது மக்காவிலிருந்து கிழக்கே 75 கிமீ தொலைவில் அஸ்-சைல் அல்-கபீர் கிராமத்தில் அமைந்துள்ளது.
கர்ன் அல்-மனாசில் என்பது நஜ்த் மக்களுக்கும் தைஃப் மற்றும் ரியாத்திலிருந்து வருபவர்களுக்கும் மிகாத் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 10வது தூதுப் பணியில் தாயிஃப் நகரத்தார்களால் துன்புறுத்தப்பட்டபோது, இந்தப் பகுதியில்தான் வானவர் ஜிப்ரயீல் (عليه السلام) அவர்கள் முன் தோன்றினார்.

யமன்லம் மீக்காத்

The Yalamlam Miqat – Photo: Wikimedia Commons

இது மக்காவில் இருந்து 92 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
யமன்லம் யெமன் மக்களுக்கும் தெற்கு திசையில் இருந்து வருபவர்களுக்கும் மிகாத் ஆக செயல்படுகிறது. கடந்த காலத்தில் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் கப்பலில் பயணம் செய்பவர்கள் இதைப் பயன்படுத்தினர்.
இப்பகுதி சதியா என்றும் அழைக்கப்படுகிறது.

அல்-ஜோஃபா மீக்காத்

The Al-Johfa Miqat – Photo: Wikimedia Commons

இது மக்காவின் வடமேற்கே 183 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
அல்-ஜோஃபா சிரியா, எகிப்து, துருக்கி மற்றும் பிற நாடுகளிலிருந்து அந்தப் பிராந்தியத்திலிருந்து வரும் மக்களுக்கு மிகாத் ஆக பணியாற்றுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவைக் கைப்பற்றுவதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டபோது, அவரது மாமா அப்பாஸ் (رضي الله عنه) அவர்களை அல்-ஜோஃபாவில் சந்தித்தார்.

குறிப்புகள்: மக்கா முகர்ரமாவின் வரலாறு – டாக்டர் முஹம்மது இல்யாஸ் அப்துல் கானி

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்

இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் விமானங்களை இயக்குவதில் சிக்கல்

கடந்த சில காலங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாக சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டு போக்குவரத்தை பாதிக்கும்விதமாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கையில் இருக்கும் விமானங்களை இயக்குவதில் சிக்கல் என்ற தகவல் மக்களை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் ஏற்கணமே பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமான எரிபொருளுக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

எகிப்து: போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல் செங்கடல் பகுதியில் பயிற்சி..!

இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி எகிப்தின் கடற்படைக் கப்பல்களுடன் செங்கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றது.

எகிப்தின் இஎன்எஸ் அல் ஜூபேர் மற்றும் அபு உபாதா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கடல் பாதுகாப்பு, பறிமுதல் பயிற்சிகள், தகவல் தொடர்பு, கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சியில் இருநாட்டு கப்பல்களும் பங்கேற்றன.

கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சிகளின் போது இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹெட்ஃபோன்களில் கேட்பவர்களுக்கு இது பொருந்தாது.

அருகில் இருப்பவர்கள் தொந்தரவு தருவதாக புகார் அளித்தால் 500 ரியால் அபராதம்
அதுமட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளில் இசையின் ஒலியை உயர்த்தும் எவருக்கும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர் புகார் அளித்தால், 500 ரியால் அபராதம் விதித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

Saudi Gazette தகவலின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்(June 30) காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவின் புனிதத் தலங்களில் திரவப் பெட்ரோலிய வாயு (LPG) நுழைவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் முடிவு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.

சமையல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய எரிவாயு அடுப்புகள் மற்றும் சிலிண்டர்கள் உட்பட அனைத்து தடைசெய்யப்பட்ட பொருட்களும் கையகப்படுத்தப்படும், மேலும் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹஜ் நாட்களில் ஹாஜிகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தீ அணைப்பு மற்றும் பாதுகாப்பு மேற்பார்வைக் குழுக்கள் குடிமைத் தற்காப்புக் குழுக்கள், மினா, முஜ்தலிஃபா மற்றும் தங்கள் வளாகங்களில் எல்பிஜி பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, புனிதத் தலங்களில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அனைத்து அலுவலகங்களுக்கும் விரிவான கள மற்றும் ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

குவைத் கல்வி முறையை மேம்படுத்தவும், அதை சர்வதேச அளவில் உயர்த்தவும் தயாராகிறது

பாரிஸ்: குவைத்தில் கல்வி முறையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெரிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை குவைத் வகுத்து வருகிறது என்று கல்வி அமைச்சர் டாக்டர் அலி அல்-முதாஃப் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோ(UNESCO) நடத்திய உருமாற்றக் கல்வி உச்சி மாநாட்டிற்கான (2022) முன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) மற்றும் குவைத் தொலைக்காட்சிக்கு அமைச்சர் முதாஃப் அளித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா பொதுச் சபையின் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டின் முன்னோட்டம் என்றும் அவர் கூறினார்.

மேலும் குவைத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பகுதி கல்வித் துறையை வளர்ப்பதற்குச் செல்கிறது என்று டாக்டர் முதாஃப் சுட்டிக்காட்டினார், இது ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அடித்தளமாகும். உச்சிமாநாட்டிற்குத் தயாராகும் வகையில், தேசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கல்வியை மாற்றியமைப்பதற்கான நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த அமைச்சகம் தயாராக உள்ளது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கோவிட்-19 அனுபவம், சீர்திருத்தங்கள் மற்றும் தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி உட்பட மாநாடு கையாளும் முக்கியமான விஷயங்களை அமைச்சர் ஆராய்ந்ததொடு. எதிர்வரும் உச்சிமாநாட்டிற்கான நாட்டின் தொலைநோக்கு மற்றும் நோக்கங்களை தெளிவுபடுத்தும் அறிக்கையை அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் வெளியிடும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

140க்கும் மேற்பட்ட கல்வி அமைச்சர்கள் மற்றும் கற்பித்தல் துறையில் உள்ள அதிகாரிகளின் பங்கேற்புடன், உருமாற்றக் கல்வி உச்சிமாநாட்டிற்கான முன்-உச்சி மாநாடு (2022) செவ்வாயன்று யுனெஸ்கோ தலைமையகத்தில் தொடங்கியது. குவைத் அமைச்சர் முதாப் தலைமையிலான குழுவினருடன் இந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்கிறது. மூன்று நாள் நடைபெறும் உச்சி மாநாடில், டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற கற்பித்தல் சிக்கல்களை ஆராய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

(புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா)

ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார்.

சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று குவைத் செய்தி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இக்கடிதத்தை சவூதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சர் இளவரசர் பைஸ்லால் பின் ஃபர்ஹான் சார்பாக சவூதி அரேபியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் அல்-குரைஜி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் அனைத்து களங்களிலும் அவற்றை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

குவைத்தில் உணவு விணடிப்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன: உணவு வங்கி தகவல்

குவைத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு 95 கிலோ உணவை வீணடிப்பதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், குவைத் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் 397,700 டன் உணவை வீணாக்குகின்றன, என 2021 க்கான உணவு கழிவு குறியீட்டு அறிக்கையின்படி ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் கூட்டாளர் அமைப்பான WRAP இதனை வெளியிட்டது. இந்த கழிவுகளில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்து வருகின்றன, மொத்த உணவில் 11 சதவீதத்தை வீணாக்குகின்றன, அதே நேரத்தில் உணவு சேவை நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முறையே ஐந்து சதவீதம் மற்றும் இரண்டு சதவீதத்தை வீணாக்குகின்றன.

உணவு மற்றும் நிவாரணத்திற்கான குவைத் வங்கியின் துணைத் தலைவர் மெஷல் அல்-அன்சாரி, கூறுகையில் ரசாயன உரங்கள் மற்றும் கால்நடைத் தீவனங்களை உற்பத்தி செய்வதற்காக உபரி உணவை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையை நிறுவுவதற்கான திட்ட முன்மொழிவை வங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது என்றார். “கடந்த சில ஆண்டுகளில் தனிநபர்கள் மற்றும் உணவு சேவை நிறுவனங்களின் விழிப்புணர்வு இல்லாததால் குவைத்தில் உணவுக் கழிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன, உணவுக் கழிவுகளை குறைக்க அமைக்கப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் சட்டங்களை ஆய்வு செய்வதற்கு வலுவான இடைநிறுத்தம் தேவைப்படுகிறது,” என்று அன்சாரி வலியுறுத்தினார்.

உலகில் உணவு வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் குவைத் 20 வது இடத்தில் உள்ளது, அறிக்கையின்படி, உலகில் ஆண்டுதோறும் 931 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது, இது கிடைக்கும் உணவில் 17 சதவீதத்திற்கு சமம். உணவு மற்றும் நிவாரணத்திற்கான உணவு வங்கி என்பது சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும், இது பசி மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது, அத்துடன் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதலின் மூலம் உணவை வீணாக்குவதைக் குறைக்கிறது.

உபரி உணவைக் குறைக்க அல்லது பயன்படுத்திக் கொள்ள செயல்படுத்தப்படும் உணவு வங்கியின் வழிமுறைகள் குறித்து, உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீட்டு விருந்துகளில் இருந்து உபரியாக சமைத்த உணவை விநியோகிக்க “அல்-இஸ்ஸா எண்டோவ்மென்ட்” என்ற தன்னார்வ குழுவுடன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளதாக அன்சாரி சுட்டிக்காட்டினார்.

குவைத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு. “இதற்கிடையில், உணவு வங்கி, கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், உணவு வீணாவதைக் குறைப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் வழிகாட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

“உபரி உணவுகளை தானமாக வழங்க மறுக்கும் நிறுவனங்கள், விலையை தக்க வைக்க முயற்சிப்பதாக கூறி, அதை வீணடிக்க விரும்புவதாக அன்சாரி சுட்டிக்காட்டினார். இருப்பினும், “சமூக பங்கேற்பு மற்றும் உபரியின் நன்கொடை நிறுவனத்திற்கு இரட்டிப்பு லாபமாகத் திரும்புகிறது” என்று உணவு மற்றும் நிவாரணத்திற்கான குவைத் வங்கியின் துணைத் தலைவர் மெஷல் அல்-அன்சாரி கூறினார்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை குவைத் விசிட் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது

வருகின்ற திங்கட்கிழமை முதல் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும்.

குவைத் ஜூன் 27, 2022 திங்கட்கிழமை முதல் குடும்பம் மற்றும் சுற்றுலா விசாக்கள் உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது.

விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளுடன் ஒரு புதிய பொறிமுறையைத் தயாரிப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையானது முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் நவாஃப் அல் அஹ்மத் அல் சபாவின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு, விசா வழங்கும் செயல்முறையை ஒழுங்கமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒழுங்குமுறைகளுடன் கூடிய புதிய பொறிமுறையைத் தயாரிக்க வதிவிட விவகாரத் துறையை அனுமதிக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

Exit mobile version