13.5 C
Munich
Thursday, September 19, 2024
Home Blog Page 123

49 மாணவர்களுக்கு கோல்டன் விசா! அமீரகத்தில் அசத்தும் இந்திய பள்ளி..

கேரளா பாடத்திட்டதைப் பின்பற்றும் ஒரு இந்தியப் பள்ளியின் மாணவ மாணவிகள் 2021-2022காண உயர்நிலைத் தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர், அபுதாபியில் உள்ள இந்திய மாடல் பள்ளியில் அனைத்து மாணவர்களும் (மொத்தம் 107) 2021-2022 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புத் தேர்வில் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த பள்ளியின் முதல்வர் அப்துல் காதர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியன் 49 மாணவர்கள் கோல்டன் விசாவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அழிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் மாணவ, மாணவியர் 95% சதவீதத்திற்கும் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வதாக உறுதியளித்து விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் யாத்ரீகர்களை ஏமாற்றுவது

அடாஹி (பலியிடப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான சவூதி திட்டம்) கூப்பனை வழங்குதல் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் போக்குவரத்தை வழங்குதல் உள்ளிட்ட மோசடிகள் பெயரில் இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஜெனரல் சமி அல்-ஷுவைரெக் கூறினார். என பொது பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் பிரிஜி கூறினார். மேலும் அவர்கள் பப்ளிக் பிராசிகியூஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சவூதியர்கள், ஆறு குடியிருப்பாளர்கள், எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியவர்கள் மூன்று பேர், ரெசிடென்சி பெர்மிட் (இகாமா) சட்டத்தை மீறிய யேமன் நாட்டை சார்ந்த நான்கு பேர், பாகிஸ்தானியர்கள் மூன்று பேர் மற்றும் மியான்மர் நாட்டவர் ஒருவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.