உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகுக்கின்றன.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. அதன்படி கனடாவில் 59.96% படித்தவர்கள். மேலும் 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
லக்சம்பர்க் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 மற்றும் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பந்தயத்தில் தென் கொரியா கூட அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்தில் உள்ளது.
கல்வி தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 5வது இடத்தை பிடித்துள்ள நிலையில், அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி பிரிட்டன் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய புள்ளியல் கழகம் கல்வி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் கல்வி தகுதி மிகவும் பின்தங்கி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது.
இவை ஒருபுறம் இருக்க அதிக கல்வி அறிவு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலக அளவில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அதன்படி மொத்த மக்கள் தொகையில் 39% பேர் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.