துபாய்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 39 பெண்கள் உட்பட இரு கும்பலைச் சேர்ந்த 48 பேர் பஹ்ரைனில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 9 ஆசியர்களும் உள்ளடங்குவதாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மனித கடத்தல் தடுப்பு மற்றும் பொது ஒழுக்கங்களைப் பாதுகாத்தல் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு கும்பல்களிடம் இருந்து ஏராளமான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், பஹ்ரைன் அரசாங்கம் நாட்டில் பல்வேறு பாலியல் கடத்தல் கும்பல்களை அகற்றியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10,000 BD வரை அபராதம் விதிக்கபடலாம், மேலும் பாதிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கான செலவை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டது.
பஹ்ரைன் தண்டனைச் சட்டம், பிரிவு 325 இன் கீழ், கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறது. பாதிக்கப்பட்டவர் மைனராக இருந்தால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.