- All
டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்?!
இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?!
ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்!
இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..! அரக்கான் ஆர்மியால் பதற்றத்தில் பங்களாதேஷ்!!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து – 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?!
வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!
டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்?!
அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும் விநியோக சங்கிலியைச் சீர்குலைக்கலாம் என்று ஐஎம்எஃப் கூறுகிறது. வரி விதிப்புகள், வரிக் குறைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரம் குறுகிய காலத்தில் விரைவாக வளர உதவும் அதே வேளையில், அவை பணவீக்கம் உயர்வதற்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று இஎம்எப் குறிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 3.3 சதவீதம் என்ற அளவில் சீராக, ஆனால் மெதுவாக இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது கடந்த காலத்தில் சராசரியாக இருந்த 3.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைவிடக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்ததைப் போலவேதான் 2025ஆம் ஆண்டின் ஐஎம்எஃப் அறிவிப்பும் உள்ளது. ஏனென்றால் முன்பு எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கருதுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த கூடுதல் வளர்ச்சி உலகெங்கிலும் உள்ள மற்ற முக்கியமான பொருளாதாரங்களில் மெதுவான வளர்ச்சியைச் சமநிலைப்படுத்த உதவும். பிரிட்டனின் பொருளாதார உற்பத்தி 2025ஆம் ஆண்டில் 1.6 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது, இது கடந்த அக்டோபரில் அவர்கள் கணித்த 1.5 சதவீதத்தைவிட சற்று அதிகம். இருப்பினும், அந்த அமைப்பு கணித்ததைவிட, கடந்த ஆண்டு பிரிட்டனின் பொருளாதாரம் அதன் வளர்ச்சியில் பலவீனமடைந்துள்ளதை சமீபத்திய ஐஎம்எஃப் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டுகின்றன. “அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் பெரிய ஐரோப்பிய பொருளாதாரமாக பிரிட்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்கா தவிர, இந்த ஆண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை மேம்படுத்தும் ஒரே ஜி7 பொருளாதாரம் பிரிட்டன்தான்” என்று அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் கூறுகிறார்.
இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, சினொபெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சீன விஜயம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 13ஆம் தேதி சீனாவுக்கு பயணமாகியிருந்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கடந்த மாதம் தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்ற அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக சீனாவுக்கு பயணித்துள்ளார். சீனா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு, சீனாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன அதிபர் அப்போது தெரிவித்துள்ளார். அத்துடன், நெருங்கிய நட்பு நாடு என்ற விதத்தில் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன அதிபர், எதிர்காலத்தில் இலங்கையுடன் இணைந்து செயல்படத் தயார் எனவும் உறுதி வழங்கியுள்ளார். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அப்போது, ”இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கலாசார, அரசியல் தொடர்புகள் குறித்து மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில்
ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்!
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் ஒரு விடியற்காலையில் இருள் சூழ்ந்திருந்தது. முதலைகளைப் பிடிக்க அரசாங்க ரேஞ்சரான கெல்லி எவின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அதுவே அவரது அன்றாடப் பணி. இதற்காக அவர் ஒரு மிதக்கும் பொறியில் ஆபத்தான சூழலில் சமநிலையைத் தக்க வைத்துக்கொண்டு பணியை மேற்கொள்கிறார். சமீபத்தில் அங்கு கரையைக் கடந்த புயலின் விளைவாக தீவிர மழை மேகங்கள் காணப்பட்டன. நாங்கள் சென்ற படகு, எஞ்சின் நிறுத்தப்பட்டு அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. இடையிடையே முதலைகளைப் பிடிக்க வைத்துள்ள பொறியில் இருந்து நீர் தெறிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. “முதலைகள் பொறியில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு” என்று கூறும் எவின் சீற்றம் கொண்டிருக்கும் முதலைகளின் தாடையைச் சுற்றி ஒரு சுருக்குக் கயிற்றை வீசி, சுற்றி வளைக்க முயல்கிறார். நாங்கள் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் இருக்கிறோம். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்குள்ள காட்டுப் பகுதிகளில் மட்டும் 100,000 உப்புநீர் முதலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.” வடக்குப் பிரதேசத்தின் தலைநகரான டார்வின், கடற்கரைகள் மற்றும் ஈரநிலங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய கடற்கரை நகரமாகும். இந்தப் பகுதியில் நீர் இருக்கும் இடத்தில் எல்லாம் முதலைகள் இருக்கும். வியத்தகு முறையில் அதிகரித்த முதலைகளின் எண்ணிக்கை `சால்ட்டிஸ்’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் உப்புநீர் முதலைகள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு அதீத வேட்டையால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முதலைத் தோல் வர்த்தகம் காரணமாக வேட்டையாடுதல் தீவிரமடைந்தது. அதன் விளைவாக, அவற்றின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆகக் குறைந்தது. ஆனால் 1971இல் அவற்றை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டபோது, முதலைகளின் என்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. அவை இப்போது பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் உள்ளன, ஆனால் அழிந்து வரும் நிலையில் இல்லை. உப்புநீர் முதலைகளின் எண்ணிக்கை உயர்வு மிகவும் வியத்தகு முறையில் நிகழ்ந்தது. இப்போது ஆஸ்திரேலியா வேறு மாதிரியான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. உப்புநீர் முதலைகளின்
இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..! அரக்கான் ஆர்மியால் பதற்றத்தில் பங்களாதேஷ்!!
இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லையில் உருவாகும் அரக்கான் ஆர்மியின் தனி நாடால் வங்க தேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மி மற்றும் வங்கதேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரியும் மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது. இந்த குழுக்கள் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக போராடி வருகிறது. தொடர்ந்து ராணுவத்தை வீழ்த்தி அரக்கான் ஆர்மி உட்பட கிளர்ச்சியாளர்கள் குழு முன்னேறி வருகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மியாமரின் பகுதிகள் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் வங்கதேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள மியன்மாருடனான டெக்னாஃப் எல்லைப் பகுதியை வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியான்மரின் அரக்கான் மாநிலத்தின் கணிசமான பகுதிகளை அரக்கான் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த சிக்கலான சூழ்நிலையில், வங்கதேசம், மியான்மர் ஜுண்டா அரசாங்கம் மற்றும் அரக்கான் இராணுவம் ஆகிய இரண்டுடனும் தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரோஹிங்கியா அகதிகளின் சமீபத்திய வருகை குறித்து பேசிய அவர், 50,000 முதல் 60,000 வரையிலான ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்பு படையினரை மீறி வங்கதேசத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குறிப்பிட்டார். புதிதாக வந்துள்ள ரோஹிங்கியாக்களை பதிவு செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், அவர்களுக்கு பங்களாதேஷில் தங்குமிடம் வழங்குவது தொடர்பாக எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பங்களாதேஷ் எல்லைப் பகுதி, பங்களாதேஷின் எல்லைப் படையினரின் கட்டுப்பாட்டில் கீழ் இருப்பதாக உறுதி அளித்த அவர் உள்ளூர் மக்கள் அச்சமடைய
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து – 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம், “காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அதே நேரம் இதை ‘ஊக்குவித்ததற்காக’ அமெரிக்க அதிபர் பைடனுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் காலில் அல்-ஹய்யா இது பாலத்தீனத்தின் “மீண்டு எழும் திறனின்” விளைவாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். பாலத்தீனர்கள் பலரும், இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்த செய்தி அறிந்து கொண்டாடினர். ஆனால், காஸாவில் போர்முனையில் பதற்றம் குறையவில்லை. கத்தார் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. இதில் காஸா நகரில் உள்ள ஷேக் ரத்வான் குடியிருப்புப் பகுதியில் இருந்த 12 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து இதுகுறித்து உடனடியாக பதில் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், “போரினால் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பை” சரி செய்வதே முதல் வேலை என்று தெரிவித்தார். பாலத்தீனர்களுக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க ஐக்கிய நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ்
வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!
முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. “கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் தொடர்ந்து 100 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.