சாட் ஜிபிடியை போன்ற ஒரு வலுவான ஏஐ கருவியை இந்தியாவால் உருவாக்க முடியாது என்று சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே இப்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்தே பேசி வருகிறது.. ஏஐ தொழில்நுட்பத்தால் உலகில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் மாற்றங்கள் எண்ணில் அடங்காதவை. ஒட்டுமொத்த உலகையும் ஏஐ தொழில்நுட்பம் மாற்றி வருகிறது.
இதற்கெல்லாம் அடித்தளமிட்டது என்னவோ சாட் ஜிபிடி தான்.. இது முதல் ஏஐ கருவி இல்லை என்றாலும், நாம் பார்த்ததிலேயே மிகவும் வலுவான ஒரு ஏஐ கருவியாக சாட்ஜிபிடி இருந்தது. A டூ Z வரை நாம் எந்தவொரு கேள்வி கேட்டாலும் துல்லியமாக சாட் ஜிபிடி பதிலளிக்கும்.
சாட் ஜிபிடி: இதனால் சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாட் ஜிபிடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியும் வரவேற்பும் மற்ற ஏஐ கருவிகளுக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதனால் பல ஏஐ நிறுவனங்கள் இப்போது தீவிர ஆய்வில் இறங்கியுள்ளன. அதேநேரம் மறுபுறம் ஏஐ தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் வல்லுநர்கள் மற்றொரு பக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.இதற்கிடையே சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விளக்க உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து உலக தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் இந்தியா வந்திருந்த அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்திருந்தார். இந்தியப் பயணத்தின் போது அவர் கூறிய சில கருத்துகள் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
- Select Language
- செய்திகள்
- ட்ரெண்டிங் நியூஸ்
- நகரம்
- சினிமா
- லைப்ஸ்டைல்
- வர்த்தகம்
- தொழில்நுட்பம்
- வாகனங்கள்
- கல்வி
- பயணங்கள்
undefined
- முகப்பு
- செய்திகள்
- வீடியோ
- சினிமா
- அரசியல்
- வணிகம்
- கூப்பன்கள்
- மாவட்டம்
- கோயம்புத்தூர்
- விவசாயம்
- தமிழகம்
- இந்தியா
- இலங்கை
- உலகம்
- வர்த்தகம்
- போட்டோஸ்
- ஜோதிடம்
- மீம்ஸ்
- டெலிவிஷன்
- ஆசிரியர் பக்கம்
- பிரஸ் ரிலீஸ்
- டிரெண்டிங் வீடியோஸ்
“இந்தியாவால் முடியாது!” வார்த்தையை விட்ட சாட் ஜிபிடி ஓனர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! என்ன நடந்தது
- By Vigneshkumar
- Published: Saturday, June 10, 2023, 14:06 [IST]
டெல்லி: சாட் ஜிபிடியை போன்ற ஒரு வலுவான ஏஐ கருவியை இந்தியாவால் உருவாக்க முடியாது என்று சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
உலகமே இப்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்தே பேசி வருகிறது.. ஏஐ தொழில்நுட்பத்தால் உலகில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் மாற்றங்கள் எண்ணில் அடங்காதவை. ஒட்டுமொத்த உலகையும் ஏஐ தொழில்நுட்பம் மாற்றி வருகிறது.
ADVERTISEMENT
இதற்கெல்லாம் அடித்தளமிட்டது என்னவோ சாட் ஜிபிடி தான்.. இது முதல் ஏஐ கருவி இல்லை என்றாலும், நாம் பார்த்ததிலேயே மிகவும் வலுவான ஒரு ஏஐ கருவியாக சாட்ஜிபிடி இருந்தது. A டூ Z வரை நாம் எந்தவொரு கேள்வி கேட்டாலும் துல்லியமாக சாட் ஜிபிடி பதிலளிக்கும்.
Don’t Miss a Beat: Follow India vs. Australia Live!Winner Media & Arts|
Recommended Video
ஏ.சி போட்ட Tent-ல உட்கார எதுக்கு பிரதமர் அங்க வரணும் – சரவணன், திமுக
சாட் ஜிபிடி: இதனால் சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாட் ஜிபிடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியும் வரவேற்பும் மற்ற ஏஐ கருவிகளுக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதனால் பல ஏஐ நிறுவனங்கள் இப்போது தீவிர ஆய்வில் இறங்கியுள்ளன. அதேநேரம் மறுபுறம் ஏஐ தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் வல்லுநர்கள் மற்றொரு பக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விளக்க உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து உலக தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் இந்தியா வந்திருந்த அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்திருந்தார். இந்தியப் பயணத்தின் போது அவர் கூறிய சில கருத்துகள் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சாம் ஆல்ட்மேன்: அதாவது சாட் ஜிபிடியை போன்ற ஒரு ஏஐ கருவியை இந்தியாவால் உருவாக்க முடியாது என்று ஆல்ட்மேன் கூறியுள்ளது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் ஏஐ கருவிகளை ரெடி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சாம் ஆல்ட்மேன், “சாட் பிஜிடி செயல்படும் விதத்தைப் பார்த்து இருப்பீர்கள்.. இதில் நீங்கள் எங்களுடன் போட்டிப் போட முடியாது.. போட்டிப் போட்டால் பலனும் கிடைக்காது. இதைத் தேவையற்ற முயற்சியாகவே இருக்கும். இருப்பினும், நீங்கள் முயன்று பார்க்கலாம். இருப்பினும், அது சாத்தியமில்லாத ஒன்றாகவே நான் கருதுகிறேன்” என்று கூறியிருந்தார்.
என்ன நடந்தது: கூகுள் இந்தியாவின் முன்னாள் தலைவரும் தற்போது முதலீட்டாளராக உள்ள ராஜன் ஆனந்தன் இந்த கேள்வியைக் கேட்டிருந்தார். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் சாட் பிஜிடி போன்ற கருவியை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என ராஜன் ஆனந்தன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆல்ட்மேன், இது சாத்தியமில்லாத விஷயம் என்று கூறியுள்ளார். அதாவது நீங்கள் முயற்சி செய்யலாம் ஆனாலும், தோல்வி தான் உங்களுக்குக் கிடைக்கும் என்பது போலக் கூறியிருந்தார்.
ஆல்ட்மேனின் இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்வியைக் கேட்ட ராஜன் ஆனந்தன் தனது ட்விட்டரில், “தெளிவான பதிலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன்.. நீங்கள் சொன்னது போல், இது வீண் முயற்சியாக இருக்கலாம். ஆனால், 5000 ஆண்டுக்கால இந்தியத் தொழில்முனைவோரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.. நாங்கள் தொடர்ந்து முயல்வோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் இங்கே மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஆல்ட்மேன் தனது பதிலில் எந்த இடத்திலும் இந்தியர்களின் திறமை குறித்துப் பேசவில்லை. சாட் ஜிபிடி போன்ற ஒரு கருவியை உருவாக்க வலுவான உள்கட்டமைப்பு தேவை. அந்த உள்கட்டமைப்பு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இல்லை என்பதையே அவர் கூறியிருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.