இந்திய மாணவியின் செயலி ஒன்றை கண்டு, Apple நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாராட்டியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.மாணவர்களுக்கான போட்டி2023ஆம் ஆண்டுக்கான Apple Swift Student Challenge போட்டி உலகம் முழுவதும் நடந்தது. இதில் அஸ்மி ஜெயின் என்ற இந்திய மாணவியும் கலந்துகொண்டார்.
இவர் உருவாக்கிய Eye Track என்ற செயலி வெகுவாக பாராட்டுகளை பெற்றது. மொத்தம் 30 நாடுகளைச் சேர்ந்த 375 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அஸ்மி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
மாணவி அஸ்மி ஜெயின் இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். தனது தோழியின் உறவினருக்கு உதவும் நோக்கத்தில் மாணவி அஸ்மி இந்த செயலியை கண்டுபிடித்தார்.
இதன்மூலம் பார்வை குறைபாடு ஏற்பட்டவரின் கண் செயல்பாட்டை கண்காணிக்க முடியும். பின் அதற்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளித்து பார்வையை மீட்க உதவ முடியும்.
ஆப்பிள் CEO பாராட்டுApple நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மாணவியின் கண்டுபிடிப்பை வியந்து பாராட்டினார். மேலும் அவருடன் Video call மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
பின்னர் டிம் குக் கூறுகையில், ‘அஸ்மி ஜெயினின் கண்டுபிடிப்பு, இந்தியாவின் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டுகிறது. மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கண்டுபிடிப்புகள், அவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கத்தை ஏற்படுத்த அஸ்மி ஜெயின் ஏற்கனவே தயாராகிவிட்டார்’ என தெரிவித்தார்.