போன்-பே மற்றும் கூகுள்-பே ஆகிய பணபரிவர்த்தனை முறைகளுக்கு மாற்றாக தற்போது மோதிரத்தை ஸ்வைப் செய்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோதிரம் மூலம் பணபரிவர்த்தனை
நேரடி பண பரிமாற்றத்தை சுலபமாக்கும் வகையில் முதலில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்ற புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கும் மாற்றாக ஜி பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை முறைகள் அறிமுகமாகியது.
ஆனால் தற்போது இதற்கும் மாற்றாக மோதிரத்தை ஸ்வைப் செய்து பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுவாகவே இப்போது எல்லாம் ஸ்மார்ட்போன்கள் நம்முடைய உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதால், ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகளான ஜி பே, போன் பே மற்றும் பேடிஎம் ஆகிய ஆன்லைன் பண பரிவர்த்தனை முறைகள் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால் இப்படிப்பட்ட ஸ்மார்ட்போன்களையும் சிலர் மறந்து விடுவதால், எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஸ்மார்ட் மோதிரம் என்ற புதிய தொழில்நுட்ப பணபரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்னணு பண நிறுவனமான McLEAR (PayrNet Limited இன் விநியோகஸ்தர்) இந்த புதிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதனை தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறது.
ஸ்மார்ட் ஸ்வைப் மோதிரம் (McLear’s Ring)
RFID தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் இந்த McLear’s Ring உங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் தரவுகளை உள்ளடக்கி வைக்கிறது. இதற்காக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை McLear’s Ring பயன்படுத்துகிறது.
இந்த ரிங்கில் எந்த வகையான கார்டு உள்ளது என்பது போன்ற விவரங்கள் சேமிக்கப்பட்டு இருக்கும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டை ஸ்வைப் செய்வது போல் மோதிரத்தை ஸ்வைப் செய்து பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். வாட்டர் புரூப் முறையில் செய்யப்பட்டிருக்கும் இந்த ரிங்கை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.சிர்கோனியா செராமிக் என்ற மூலப் பொருள் மூலம் உருவாக்கப்படும் இந்த மோதிரத்தை நீண்ட நாட்கள் வரை உபயோகிக்க முடியும். இந்தியாவில் அறிமுகம் இந்த ஸ்மார்ட் ஸ்வைப் மோதிரம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படவில்லை.
ஆனால் இதனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர கடுமையாக உழைத்து வருவதாக McLear நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி டேனியல் ப்ளாண்டெல் தெரிவித்துள்ளார்.