தினமும் 1 மீன் எண்ணெய் சப்ளிமெண்ட் எடுத்தீங்கன்னா உங்க உடம்பில் இந்த 7 மாற்றங்கள் நடந்திடும்…

மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்டுகளை தினமும் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்குக் காரணம் நம்முடைய உடலுக்குத் தேவையான ஒமேகா 3 உள்ளிட்ட கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பது தான். அதுமட்டுமின்றி தினமும் மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பகுதியில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை முழுமையாக உணவின் மூலம் பெற முயற்சி செய்ய வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ள முடியாத போது சப்ளிமெட்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே ஊட்டச்சத்து பற்றாக்குறையும் அதனால் பல ஆரோக்கிய பிரச்சினைகளும் உண்டாகும். அப்பபடி நமக்குத் தேவையான அடிப்படையான சப்ளிமெண்ட்டுகளில் ஒன்று தான் இந்த மீன் எண்ணெய்.

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மீன் எண்ணெயில் உள்ள அதிக அளவிலான கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு இதய நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும்.

​ஞாபக ஆற்றலை மேம்படுத்தம்

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் நரம்பு மண்டலத்தின் வேலையைத் துரிதப்படுத்தவும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் ஒமேகா 3 மிக முக்கியம்.

இந்த ஒமேகா 3 நிறைந்த மீன் எண்ணையை தினசரி சப்ளிமெண்ட்டில் ஒன்றாகச் சேர்க்கும் போது அது ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு வயதானவர்களுக்கு ஏற்படும் டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தள்ளிப் போடுகிறது.

​இன்பிளமேஷன்களை தடுக்கும்

மீன் எண்ணெயில் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் தினமும் ஒரு மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் இன்பிளமேஷன்கள் குறைவதோடு அவற்றால் ஏற்படும் நோய்களையும் தடுக்கிறது.

​சரும நோய்கள் வராமல் தடுக்கும்

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.குறிப்பாக சரும நோய்கள் உண்டாகாமல் தடுக்கும். சருமத்தை பொலிவாகவும் நீர்ச்சத்துடனும் வைத்திருக்கச் செய்யும்.

கண் பார்வை திறன் அதிகரிக்க

கண்களின் ஆரோக்கியத்தற்கு மீன் எண்ணெய் மிக அவசியம். கண்பார்வை தெளிவாக இருக்கவும், கண்களில் ஏற்படும் நீர் வடிதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்த ஒமேகா 3 மிக முக்கியம்.

அதனால் கண் பார்வை திறன் மேம்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் மீன் எண்ணெயை சப்ளிமெண்ட்டாக எடுத்துக் கொள்வது நல்லது.

​எலும்பு ஆரோக்கியத்துக்கு

எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு கால்சியம் மட்டுமல்ல, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் தேவை.

இயல்பாகவே குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மானம் உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். இந்த எலும்பின் அடர்த்தி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு எலும்பு சார்ந்த நோய்களை தடுகு்க மீன் எண்ணெய் மிக அவசியம்.

​எடையை குறைக்க உதவும்

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.

உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் போது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொலஸ்டிரால் குறைவதோடு எடை இழப்பையும் மேம்படுத்துகிறது.

மேற்கண்ட எல்லா பயன்களும் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால் உங்களுடைய மருத்துவரை ஆலோசித்த பிறகு மீன் எண்ணையை உங்களுடைய தினசரி சப்ளிமெண்ட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times