இன்றைய காலத்தில் கன்டெண்ட் கிரியேஷன் என்பது மிகவும் பிரபலமான மீடியமாக மாறி வருகிறது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், உங்களுக்கு விருப்பமான காணொளிகளை தயாரித்து நீங்களும் கன்டெண்ட் கிரியேட்டராக வலம் வரலாம். பெரும்பாலான வீடியோ கிரியேட்டர்கள் போனிலேயே எடிட் செய்கிறார்கள்.
இப்படி செய்வது எளிதானது என்பதால், பலருடைய விருப்பத் தேர்வாக மொபைல் வீடியோ எடிட்டிங் செயலிகள் உள்ளன. நீங்களும் அத்தகைய விருப்பம் கொண்ட நபராக இருந்தால், இந்த பதிவில் நான் சொல்லப்போகும் 3 செயலிகளை பயன்படுத்திப் பாருங்கள். தரமாகவும், எளிதாகவும் வேற லெவலில் எடிட் செய்யலாம்.
Cap Cut: நீங்கள் அதிகமாக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் நபராக இருந்தால், உங்களுக்கான சிறந்த செயலி இதுதான். இந்த செயலி இந்தியாவில் நேரடியாக ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியாது என்றாலும், VPN பயன்படுத்தி அதன் எல்லாம் அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் ரீல்ஸ் வீடியோக்களை எடிட் செய்வதற்கான டெம்பளேட்டுகளும் இருப்பதால், குறைந்த நேரத்தில் வேகமாக உங்களால் எடிட் செய்ய முடியும். நான் இதை கடந்த ஓராண்டாகவே பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள அம்சங்கள் உண்மையிலேயே சூப்பராக உள்ளது.
Kinemaster: ஸ்மார்ட் ஃபோனில் எடிட் செய்யும் பெரும்பாலான நபர்கள் இந்த செயலியைதான் பயன்படுத்துவார்கள். அந்த அளவுக்கு எடிட் செய்ய எளிதாக இருக்கும். ஒன்றுமே தெரியாதவர்கள் கூட, இந்த செயலி வாயிலாக விரைவில் கற்றுக்கொண்டு எடிட் செய்யலாம். நீங்கள் யூடியூப் சேனல் உருவாக்கி லாங் ஃபார்ம் கன்டென்ட் பதிவிட விரும்பினால், இந்த செயலி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
PicsArt: மேற்கூறிய இரண்டுமே வீடியோ எடிட் செய்யும் சிறந்த செயலிகளாகும். நீங்கள் புகைப்படங்களை தரமாக எடிட் செய்ய விரும்பும் நபராக இருந்தால், பிக்ஸ்ஆர்ட் முயற்சித்துப் பாருங்கள். இதில் உள்ள அம்சங்கள் அனைத்துமே, கம்ப்யூட்டரில் போட்டோ ஷாப்பில் இருப்பது போலவே இருக்கும். அதைவிட மேம்பட்ட அம்சங்களும் இதில் கொடுத்திருப்பார்கள். இதன் மூலமாக திருமணப், பிறந்தநாள், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு பேனர் மற்றும் போஸ்டர்களை எடிட் செய்யலாம். புகைப்படங்களை தேர்வு செய்து, அதன் பேக்ரவுண்டை ரிமூவ் செய்வது இந்த செயலியில் மிக சுலபம். உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் புகைப்படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று செயல்களில், Kinemaster மற்றும் PicsArt பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. Cap Cut செயலியை நீங்கள் குரோமில்தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். முக்கியமாக இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு VPN அவசியம்.