கோடை வெயிலை சமாளிக்க நச்சுனு 5 டிப்ஸ்!

இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள்: கோடைகாலத்தில் நாம் எதுபோன்ற ஆடைகளை உடுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை பருத்தி அல்லது கைத்தறி போன்ற இளரக, காற்று எளிதில் வெளியேறக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆடை அடர் நிறத்தில் இல்லாமல், வெளிர் நிறங்களில் தளர்வான ஆடைகளைப் பயன்படுத்தினால், சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்து உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்: நமது ஊரிலேயே பல விதமான குளிர்ச்சி அளிக்கும் உணவுகள் கிடைக்கிறது. தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வெள்ளரி ரைத்தா, தர்பூசணி போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.

நீரேற்றத்துடன் இருங்கள்: கோடைகாலங்களில் நீரேற்றத்துடன் இருப்பது முக்கியமானது. எனவே அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இத்துடன் மோர், இளநீர், பழச்சாறு போன்ற புத்துணர்ச்சியூட்டும் உள்ளூர் பானங்களையும் குடிப்பது நல்லது. இவை உங்கள் தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி உடலுக்குத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

வெயிலில் அதிகம் போகாதீர்கள்: நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால், பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க அதிக SPF கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதிர்கள். 

குளிர்ச்சியான இடத்திற்குச் செல்ல திட்டமிடுங்கள்: தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் கொளுத்தினாலும், ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்கள் குளிர்ச்சி நிறைந்த இடமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. எனவே கோடைகாலத்தில் குடும்பத்துடன் இத்தகைய குளிர் பிரதேசங்களுக்கு ஒரு ட்ரிப் போக திட்டமிடலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times