காலநிலை மாற்றத்தால் நடுவானில் பறக்கும் விமானங்களின் குலுங்கல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்கள் குலுங்கல் அதிகரிப்பு
பூமி வெப்பமடைந்து வருவதால் விமானப் பயணத்திலும் ஒருவிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் அறிக்கையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், கார்பன் உமிழ்வினால் பூமி வெப்பமடைவதால், காற்றும் வெப்பமடைகிறது. இதனால், வானில் உயரமான காற்றின் வேகத்தில் சில மாறுபாடுகள் ஏற்படுகிறது. இதனால், விமானங்கள் நடுவானில் பறக்கும்போது, திடீரென குலுங்கல் ஏற்படுகிறது.
தற்போது இந்த மாதிரியான விமான குலுங்கல் அதிகரித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் பாதையில் காற்றின் வேகமாறுபாடு 55 விழுக்காடு அதிகரித்துள்ளது. நடுவானில் விமானம் பறக்கும் போது திடீரென்று விமானங்கள் குலுங்குகிறது.
அப்போது, விமானிகள் விமானத்தை இயக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். வெப்ப காற்றில் சிக்கும் விமானங்களின் குலுங்கலை தவிர்க்க அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒரு வருடத்திற்கு 150 மில்லியன் டாலர் செலவு செய்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.