பெருவை மிரட்டும் அரிய நோய்… அவசர நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றது. கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் தற்போது தான் மீண்டு வருகின்றன.

இந்நிலையில் அரிய வகை நோய் ஒன்று பெரு நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறது. அரிய நரம்பியல் கோளாறு நோயான Guillain-Barré Syndrome நோய் பெரு நாட்டு மக்களிடையே அதிகரித்து வருகிறது. நோய் தாக்கிய உடனேயே மோசமான விளைவுகளை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை முடக்கி விடுகிறது.

பெரு அரசு, ஜூலை 8 ஆம் தேதி முதல் நாடு தழுவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது. இந்த நோய்க்கு இதுவரை நாடு முழுவதும் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறுகிய காலத்திலேயே இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதால் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ள அந்நாட்டு அரசு இந்த அவசர நிலை 3 மாதங்கள் நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளுது.

நோய் பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் 140 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த Guillain-Barré சிண்ட்ரோம் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் அதன் நரம்புகளைத் தாக்கும் ஒரு அரிய நோய் ஆகும். இந்த நோய் பாதிப்பை கண்டறிந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் பாதித்தவரின் நிலைமை விரைவில் மோசமாக்கிவிடும்

இது ஒரு தீவிரமான நிலை, இது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும், ஏனெனில் இது நோயாளியின் நிலையை விரைவாக மோசமாக்குவதாக கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து விடுபட்ட பின்னரும் கூட நோய் பாதித்தவர்கள் பலவீனமாகவே உணருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் ஆரம்ப அறிகுறிகளாக, உணர்வின்மை, தசை பலவீனம், கடுமையான உடல் வலி, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிந்தைய அறிகுறிகளாக, உதவி இல்லாமல் நடப்பதில் சிரமம், கால்கள், கைகள் மற்றும் முகத்தை நகர்த்த இயலாமல் முடக்கம் ஏற்படுவது, சுவாசிப்பதில் சிரமம், மங்கலான அல்லது இரட்டை பார்வை, பேசுவதில் சிரமம், விழுங்குவதில் அல்லது மெல்லுவதில் சிக்கல்கள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் மலச்சிக்கல் தொடர்ச்சியான கடுமையான வலி ஆகியவை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளர். நோய் பாதித்த 4 வாரங்களில் அதன் கடுமையான நிலையை அடைந்து விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times