இது 1.5 லட்சமா! ஓவரா சூடாகுது..தொட்டாலே ரொம்ப ஈஸியா உடையுதே..ஐபோன் 15ஐ கிழித்து தொங்கவிடும் யூசர்கள்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 15 மொபைலில் சில மாடல்கள் அதீத வெப்பமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அவை எளிதாக உடைவதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

உலகெங்கும் இருக்கும் மொபைல் நிறுவனங்கள் என்னதான் ஆண்டுக்கு 10, 15 மொபைல்களை வெளியிட்டாலும் கூட ஐபோன்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி ரகம். ஒவ்வொரு ஆண்டும் செப். மாதம் வெளியாகும் ஐபோன்களுக்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு அள்ளும்.

அதன்படி இந்தாண்டும் ஐபோன்கள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல ஐபோன், ஐபோன் பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என 4 மாடல்களை வெளியிட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஐபோன் 15 மாடல்: இதில் ஆப்பிள் ஐபோன் 15 விலை ரூ.79,900இல் தொடங்குகிறது. மேலும், ஐபோன் 15 பிளஸ் மாடல் விலை ரூ.89,900ஆக இருக்கும் நிலையில், , ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் விலை முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900ஆக இருக்கிறது. இத்தனை பெரும் தொகையைக் கொடுத்தாலும் ஐபோன்களை வாங்குவது பெரும் போராட்டமாகவே இருக்கிறது. பல மணி நேரம் வரிசையில் நின்று மொபைல் வாங்க வேண்டிய நிலையே இருக்கிறது.

இப்படி பெரும் போராட்டத்திற்குப் பிறகு இவ்வளவு அதிக தொகையைக் கொடுத்து ஐபோன்களை வாங்கிய பிறகு சில அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது, ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மாடல்கள் பயன்படுத்தும் போதும் சரி சார்ஜ் செய்யும் போது சரி அதிக வெப்பமடைவதாகச் சிலர் புகார் அளிக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேல் செலவழித்து மொபைல் வாங்கிய நிலையில், திடீரென மொபைல் சூடாவதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூடாகும் ஐபோன்: எக்ஸ், டெட்டிட் என பல்வேறு தங்களிலும் இது குறித்து ஐபோனை புதிதாக வாங்கிய பலரும் புகார் தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர். மொபைல்களில் கேம் விளையாடும் போதும், பேஸ் டைமில் வீடியோ கால் போடும் போதும் போனின் பின்புறம் மற்றும் சைட்கள் சூடாக மாறுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இன்னும் சிலர் வெறுமென சார்ஜ் போடும் போதே மொபைல் சூடாவதாகத் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி ஆப்பிள் கஸ்டமர் கேரும் பலரும் இது குறித்து கால் செய்து புகார் அளிக்கிறார்கள். தங்கள் மொபைலில் ஏதோ பிரச்சினை இருப்பதால் அதை மாற்றித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். இருப்பினும், புதிய மொபைல்களில் திடீரென அதீத கேம் அல்லது சார்ஜ் செய்யும் போது இப்படி மொபைல் சூடாவது வழக்கம் தான் என்று சில நாட்களில் இது சரியாகும் என ஆப்பிள் கஸ்டமர் கேர் பதிலளித்து வருகிறது.

என்ன பிரச்சினை: இருப்பினும், ஆப்பிள் சார்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆப்பிளின் வருமானத்தில் சரிபாதி ஐபோன்களில் இருந்தே வருகிறது. எப்போதுமே புதிய மாடல்கள் வரும் போது இதுபோல நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுவது வழக்கமான ஒன்றுதான். பொதுவாக சில நாட்களில் இவை தானாக மறைந்துவிடும். சில மோசமான பிரச்சினை ஏற்படும்போது அவை சாப்ட்வேர் அப்டேட் கொடுத்துச் சரி செய்யப்படும்.

பொதுவாக ஐபோன் விற்பனைக்கு வரும் முன்பு, அவை கடும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்பதால் அதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலும், இப்போது வரும் மொபைல்களில் அதிவேக சார்ஜ், மிகவும் சின்ன பிராசஸர்களை கொண்டிருப்பதால் அவை சூடாவது இயல்வான ஒன்றுதான். இருப்பினும், மொபைலை தொட முடியாத அளவுக்குச் சூடானால் தான் அது பிரச்சினையாகக் கிளம்பும். ஏனென்றால் அவை வெடித்துச் சிதறவும் வாய்ப்புகள் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times