ஐக்கிய அரபு அமீரகத்தை போல இந்தோனேசியாவும் கோல்டன் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில உலக நாடுகள், வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், திறமையாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது.
கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கோல்டன் விசாக்கள் செல்லுபடியாகும். கோல்டன் விசா வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சொந்த ஊரில் இருப்பதை போன்று சுற்றுலாப் பயணிகளை உணர வைக்கும் இந்த கோல்டன் விசா.
ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மட்டுமின்றி இத்தாலி, மலேசியா, கனட உள்ளிட்ட சில நாடுகளும் கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தோனேசியாவும் கோல்டன் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளது.
அதன்படி இந்தோனேசியாவின் முதல் கோல்டன் விசா OpenAI நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கோல்டன் விசாவை சாம் ஆல்ட்மேனுக்கு வழங்கியுள்ளது இந்தோனேசியாவின் குடியேற்ற ஆணையம்.
சர்வதேச அளவில் OpenAI நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு நல்ல பெயர் இருப்பதால் அதன் மூலம் இந்தோனேசியாவுக்கு அவரால் பலன்களை கொண்டு வர முடியும் என்று இந்தோனேசிய குடியேற்ற ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார். சாம் ஆல்ட்மேன்