சவுதிஅரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் இக்காமா, பாஸ்போர்ட் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை நிறுவனங்களோ, முதலாளியோ தங்கள் கைவசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு 1000 ரியால் அடிப்படையில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், வேலை ஒப்பந்தம் அல்லது அனுமதி இல்லாமல் தொழிலாளிகளை வேலைக்கு அனுமதித்தால் ஒரு தொழிலாளிக்கு 5000 முதல் 10000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.