நைஜீரியாவில் நடந்த படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்து விபத்து
திங்கட்கிழமை காலை வடக்கு நைஜீரியாவில் நைஜர் மாகாணத்துக்கு அருகில் உள்ள நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி கொண்டு இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் படகில் தங்களது பைக்குகளை எடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் பலி
அதிகாலை 3 மணியளவில் இந்த படகு விபத்து நடந்தால் இது குறித்து சிறிது நேரம் வரை மக்கள் யாரும் அறிந்து இருக்கவில்லை.இந்த நிலையில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் 100 பேர் வரை இறந்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் யாரும் உயிர் பிழைத்துள்ளனாரா என தெரியவில்லை என்றும், மீட்பு பணியாளர்கள் சில உயிரிழந்த உடல்களை இன்னும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.