சவுதி அரேபியாவில் விசிட் விசாவில் வந்த பலரும் ஒவ்வொரு மூன்று மாதங்கள் முடியும் போதும், பஹ்ரைன் சென்று வரும்போது அவர்களது விசா மூன்று மாதங்களுக்கு ரினீவல் ஆகிறது. ஆன்லைனில் விசா ரினீவல் செய்யும் பலருக்கும் மூன்று மாதங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் வருவதால், பலரும் பஹ்ரைன் சென்று வருகின்றனர்.
இவ்வாறு பஹ்ரைன் செல்பவர்களுக்கு முன்னதாக தரைப்பாலத்திலேயே ஆன்-அர்ரைவல் விசா கிடைத்ததால், அவர்கள் எளிதாக செல்ல முடிந்தது. ஆனால், தற்போது ஆன்-அர்ரைவல் விசா நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைனில் பஹ்ரைன் விசா எடுக்காமல் செல்லும் அனைவரும் பாலத்திலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். எனவே, பஹ்ரைன் செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும். இந்த கட்டுப்பாடுகள் ஒரு சில நாட்களுக்கு மட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.